பணப்பெட்டியை நான் எடுக்க போறேன்… அப்போ…வெளியேறப்போவது இவரா ?
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பிக் பாசை பார்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
தற்போது, பிக் பாஸ் வீட்டில், ராஜூ,நிரூப், சிபி, அமீர்,பாவனி, பிரியங்கா, தாமரை என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

பெட்டியில் பணம்
பிக் பாஸில் போட்டியின் கடைசி வாரத்தின் பாதியில் ஒருவர் வெளியேறும் நிலைவரும், சூட்கேஸில் ஒரு பெரிய தொகை வைத்து இல்லத்திற்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளராக முடியாது என்று கருதும் நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.

ரூபாய் 3 லட்சம்
அனைவரும்,எதிர்பார்த்து காத்திருந்த இந்த பணம்பெட்டியை நடிகர் சரத்குமார் கொண்டு வந்தார். பலபல வென்று ஜொலிக்கும் அந்த பெட்டியில் 3 லட்சம் தொகை வைக்கப்பட்டுள்ளது. முந்தையசீசன்களில் 5 லட்சமாக இருந்த தொகை கணக்குப்படி பார்த்தால் கூடி இருக்க வேண்டும் ஆனால் , 3 லட்சமாக குறைந்துள்ளது. இந்த பணப்பெட்டியை கொண்டு வந்த சரத்குமார் அனைவரும் ஜெயிக்க முடியாது யாராவது ஒருவர் தான் ஜெயிக்க முடியும் இதனால், யோசித்து விளையாடுங்கள் என்றார்.

பணப்பெட்டியை நான் எடுப்பேன்
இதையடுத்து, நிரூப்,யாரும் அந்த பண பெட்டியை எடுக்கவில்லை என்றால், அந்த பெட்டியை நான் எடுத்தாலும் எடுத்து விடுவேன் என்று அனைவர் முன்பும் கூறுகிறார். இந்த வீட்டில் நான் இத்தனை நாள் இருந்ததே மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். இதனால், பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதால் எந்த வித தவறும் இல்லை என்று நிரூப் கூறுகிறார்.
Recommended Video

பணத்தை பார்த்ததும்
தாமரை உடனே, வேண்டாம்டா தம்பி, நீ வீட்டில் இரு, நான் இருக்கும் வரைக்கும் இரு என்று கூறுகிறார். உடனே நிரூப் அக்கா நீ பைனல் போய்விடுவா இன்னும் ஒருவாரம் தான் என்று அவரை சமாதானம் செய்கிறார். நேற்று 20 லட்சம் கொடுத்தாக்கூடபோகமாட்டேன், பைனல் போக வேண்டும் அது தான் எனக்கு வெறினு சொன்ன நிரூப், இப்போ பணத்தை பார்த்ததும் மாறிவிட்டாரே என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











