நீ பயந்தாங்கோலி … அதை ஒத்துக்கோ… நிரூப்பிடம் கொத்தளித்த சிபி !

சென்னை : இந்த வாரம் முழுவதும் சர்க்கரை உப்பு மற்றும் வெங்காயம் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று உத்தரவை பிக்பாஸ் வழங்கினார்.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு வெளியேறிய CIBY | Ciby Walkout with 12 Lakhs | Ciby, Amir, Bigg Boss 5 Tamil

இந்த டாஸ்க்கால் பிக் பாஸ் வீட்டில் ஒரு பிரளயமே வெடித்தது என்று சொல்லலாம்.

எப்போதும் ஆர்வகோளாருடன் இருக்கும் நிரூப் இந்த டாஸ்கிலும் முந்திக்கொண்டதுதான் சண்டைக்கு காரணம்.

பணப்பெட்டி

பணப்பெட்டி

பிக் பாஸ் வீடு இன்றும் பரபரப்புடனே இருந்தது கார்டன் ஏரியாவில் இருந்த பணப்பெட்டியில் தொகை அதிகரித்துக்கொண்டே போவதுதான் அந்த பரபரப்புக்கு காரணம். யார் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு போவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நிரூப், பாவனி, பிரியங்கா அனைவருமே கூடுதல் தொகைக்காக காத்து இருக்கிறார்கள்.

புதுவித டாஸ்க்

புதுவித டாஸ்க்

ஒரு பக்கம் டேர் டெலிபோன் மற்றொரு பக்கம் சாக்ரிஃபைஸ் செல்போன் வைக்கபப்ட்டுள்ளது. ஃபோன் அடிக்கும் போது, யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டும். நிரூப் சாக்ரிஃபைஸ் செய்யும் ஃபோனை எடுத்தவுடன் இந்த வாரம் முழுவதும் சர்க்கரை உப்பு மற்றும் வெங்காயம் இல்லாமல் சாப்பிட வேண்டும் என்று உத்தரவை பிக் பாஸ் வழங்கியுள்ளார்.

கட்டாயப்படுத்திய நிரூப்

கட்டாயப்படுத்திய நிரூப்

மேலும், சர்க்கரை, உப்பு மற்றும் வெங்காயம் பொருட்களையும் ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். இந்த போட்டியை விளையாடியே தீர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், நிரூப் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் இந்த டாஸ்க்கை செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்.

கெத்து

கெத்து

ஆனால் மற்ற போட்டியாளர் உப்பு ,சர்க்கரை இல்லாமல் இருக்க முடியாது என்றும் இந்த டாஸ்கை செய்யவில்லை என்றால் என்ன ஆகும் என்று கேட்டனர். ஆனால், நிரூப் உப்பு சாப்பிடாமல் இருக்கிறது எவ்ளோ கெத்து தெரியுமா என்றும் 95 நாள்ல இந்த வீட்ல வேற என்ன இழந்துருக்கோம் என்று அடுத்தடுத்து நிரூப் ஹவுஸ்மேட்ஸ்களை எப்படியாவது சம்மதிக்க வேண்டும் தீவிரமாக முயற்சி செய்கிறார்.

நீ பயந்தாங்கோலி

நீ பயந்தாங்கோலி

இதையடுத்து, பேசிய சிபி,என்ன எல்லாரையும் சாவசொல்லுவாங்களா? இந்த டாஸ்க் செய்ய முடியும், இது செய்ய முடியாதுனு சொல்றதை விட்டுட்டு நிரூப் ரொம்ப பயப்படுறான் என்றார். இதனால் சிபிக்கும் நிரூப்பிற்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. கோவத்தின் உச்சத்திற்கு போன சிபி, உனக்கு பயம் வந்துடுச்சி, நீ எப்படியாவது சேவ் ஆகனும் பார்க்குற, நீ பயந்தாங்கோலி ... அதை ஒத்துக்கோ என்று கத்தினார். இதையடுத்து, ராஜு அனைவர் இடத்திலும் கலந்து பேசி இந்த டாஸ்கை செய்ய சம்மதித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X