நான் ஃபினாலேவுக்கு போவேன்.. பட் வின் பண்ண வாய்ப்பு இல்லை.. கான்பிடன்டை இழந்த அமீர் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 95 நாட்களை கடந்துள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் ராஜு, அமீர்,சிபி, அமீர்,நிரூப்,பாவனி, தாமரை, பிரியங்கா என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில், அமீரைத் தவிர அனைவருமே நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பணப்பெட்டி
பிக் பாஸ் வீட்டில் முதலில் 3 லட்சம் ரூபாயுடன் பணப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, 5 லட்சம், 6 லட்சம், 9 லட்சம் என பணம் உயர்ந்து கொண்டே சென்றது. குறைந்த அளவு பணம் இருந்ததால் யாரும் பணத்தை எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

வின் பண்ண மாட்டேன்
பணப்பெட்டியில் பணம் உயர்ந்து கொண்டே சென்று பணப்பெட்டியில், தற்போது 11 லட்சமாக இருந்தது. 11 லட்ச ரூபாயை பார்த்த அமீர், டிக்கெட் டூ ஃபினாலே ஜெயிச்சிட்டேன், அடுத்த வாரம் நான் ஃபினாலேக்கு போவேன்னு தெரியும். பட் யோசிக்கும் போது வின் பண்ண வாய்ப்பே இல்லன்னு தோணுது. அதுவும் இல்லாம, இதுவு இல்லாம நடுவுல நின்னுட்டு இருப்பேன். யோசிச்சு பாக்கும் போது இது தான் புத்திசாலி தனமா இருக்கும்ன்னு தோணுது என்று அமீர் கூறுகிறார்.

பணத்தை எடுத்த அமீர்
உடனே போட்டியாளர்கள் அனைவரும், ஏய் தவறான முடிவு எடுக்காதே அமைதியா இரு என்று கூறுகின்றனர். ஆனால் , அமீர், இந்த பணம் எனக்கு கிடைப்பது ரொம்ப பெரிய விஷயம். வெளியில் போனால் இந்த பணத்தை என்னால் சம்பாதிக்க முடியுமானு தெரியவில்லை என்றார். இதையடுத்து, அனைவரும் அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் கூறும் போது... சிரித்துக்கொண்டே ப்ராக் என்று கூறிவிட்டார்.

தாமரை எடுப்பாரா
இதையடுத்து, மீண்டும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வீட்டில் அப்படியே உள்ளது. பணப்பெட்டி வைத்த நாள் முதல் நிரூப் பணத்தை எடுத்துக்கொள்வதாக கூறிக்கொண்டு இருக்கிறார். மேலும் தாமரைக்கும் நிரூப் அறிவுரை கூறிவருகிறார்.


Click it and Unblock the Notifications











