இங்கொரு முகம்… அங்கொரு முகம் வேண்டாம்… பாவனிக்கு கமல் சொன்ன அட்வைஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போகிறவர்கள் யார் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
முந்தைய சீசன் போல் இல்லாமல் இந்த சீசனில் பிரியங்கா, அண்ணாச்சி, பாவனியை தவிர அனைவரும் புதுமுகங்களாகவே இருந்தாலும் போட்டி சுவாரசியமாகவே சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் நேற்று போட்டியாளர்களுக்கு பல அட்வைஸ்களை கொடுத்தார்.

போட்டியாளர்களிடம் பேசிய கமல்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் கமல்ஹாசன், நேற்று போட்டியாளர்களை தனித்தனியாக கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து அவர்களின் நிறை, குறைகள் குறித்த பேசினார். ஆனால், பல போட்டியாளர்களிடம் நேரடியாக எதையும் சொல்லாமல் சுற்றி வளைத்து பேசினார்.

கவனமாக இருங்கள்
பாவனியிடம் பேசிய கமல், நீங்கள் கேமை புரிந்து விளையாடுகிறீர்கள், ஆரம்பத்தில் இருந்தே தனியாக விளையாடி வருகிறீர்கள். நீங்கள் சொல்ல நினைப்பது வேறு விதமாக வெளியில் காட்டப்படுகிறது. அதில் கவனமாக இருங்கள். உங்கள் அக்கா சொன்னது போல, நெகட்டிவிட்டியை பாசிட்டிவிட்டியாக மாற்றிவிடுகிறீர்கள், அதை தொடர்ந்து செய்யுங்கள் என்றார்.

இங்கொரு முகம் அங்கொரு முகம்
மேலும், பேசிய கமல், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை உறுதியாக எதிர்த்து நிற்கிறீர்கள் அது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். மக்களும் இதை பாராட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார். ஆனால் , பாவனியோ நெகட்டிவிட்டியா... பாசிட்டிவிட்டியா.. ஒன்னுமே புரியல என்பது போலவே இருந்தார். இறுதியாக இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டாதீர்கள் என்று பாவனிக்கு பல அறிவுரைகளை கூறினார் கமல்.
Recommended Video

காயின் டாஸ்கின் போது
காயின் டாஸ்கின் போது கூட பாவனி இரட்டை முகத்துடனே இருந்தார். இதை அப்போதே கமல் சுட்டிக்காட்டி கண்டித்தார். அதுபோல, அபிநய் காதல் விவகாரத்திலும் கூட அபிநய் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாக அவரிடம் கூறாமல் மற்றவர்களிடம் கூறி விவகாரத்தை பெரிதாக்கியதே பாவனிதான். இதனால் தான் கமல், பாவனிக்கு இந்த அட்வைசை கொடுத்து இருக்கிறார். பார்க்கலாம் இருக்கிற 20 நாளில் பாவனி எப்படி இருக்கிறார் என்று.


Click it and Unblock the Notifications











