ஆரம்பமே அசத்தல்.. பிக்பாஸ் சீசன் 5 வீட்டை சுற்றிக்காட்டிய கமல்... ரொம்ப சொகுசாதான் இருக்கு!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொடக்கமாக பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காண்பித்துள்ளார் கமல்ஹாசன்.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்க அசத்தலாக தொடங்கியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

மர வேலைப்பாடுகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கமாக நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டை சுற்றி காண்பித்துள்ளார். கடந்த ஆண்டை காட்டிலும் பிக்பாஸ் வீட்டில் இம்முறை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டில் மர வேலைப்பாடுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளது.

மூடப்பட்ட நீச்சல் குளம்
பிக் பாஸ் வீட்டின் பிரதான நுழைவு வாயில் பிக் பாஸ் சீசன 5 குறிக்கும் விதத்தில் 5ம் நம்பர் வடிவத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் குளத்தின் மீது வலை போட்டு வைத்திருந்த நிலையில், இந்த சீசன் பாதி நீச்சல் குளத்தையே மூடி அதற்கு மேல் சில சேர்களையும் போட்டு கார்டன் ஏரியாவாக மாற்றியுள்ளனர்.

கிசுகிசுக்கள் உருவாக போகிறது
பாத்ரூம் ஏரியாவில் மிகப்பெரிய சைக்கிள் செட்டப் செம அழகாக போடப்பட்டிருக்கிறது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இந்த சைக்கிள் செட்டப் முன்பாகத் தான் தினமும் பல் துலக்கவும் முகம் கழுவவும் போகின்றனர். பலர் கதைகள், கிசுகிசுக்கள் இங்குதான உருவாக போகிறது.

கன்ஃபெஷன் ரூம்
வரவேற்பு அறை முதல் படுக்கை அறை வரை லக்ஸரி லுக்கில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனி படுக்கையறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சீசன் கன்ஃபெஷன் ரூம் பச்சை நிறத்தில் பளீச்சென உள்ளது. மேலும் இருக்கையும் தாரளமாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டின் கிச்சன்
பிக்பாஸ் வீட்டின் டைனிங் ஹாலும் படு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் பீனிக்ஸ் பறவை அமைக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி நிறுவன விளம்பரத்துடன் இரண்டு கேஸ் அடுப்புகள் உள்ள சமையல் அறை போன சீசனில் இருந்த அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











