என்ன இப்படி சொல்லிட்ட... எல்லாம் மறந்துப்போச்சா ... தாமரையை கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் இருவர் இருவராக உட்காரச் சொல்லி எனக்கு ஏன் வோட் போட வேண்டும்,இவருக்கு ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்ற கேள்வி கேட்டு கோர்த்து விடுகிறார் கமல்.
இதில் நிரூப் சிபி இருவரும் ஜோடியாக அமர்ந்து இருக்க, நிரூப், சிபி இன்னும் கேமிற்குள்ளேயே வரவில்லை என்கிறார்.
இதையடுத்து, பாவனி தாமரை ஜோடியாக அமர்ந்து இருக்கிறார்கள் அப்போது, தாமரை, பாவனிக்கு என் அளவுக்கு தைரியமே இல்லை கூற, தெளிவாக சொல்லிட்டாங்க என்று பாராட்டுகிறார் கமல். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

திறன் குறைந்துவிட்டது
இந்த ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்ஸ் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். வருண் நல்ல போட்டியாளர் தான். வந்த போது இருந்த வேகம் இப்போது நிரூப்புக்கு இல்லை. தனித்தன்மையை இழந்து விட்டார். சிந்திக்கும் திறனும் குறைந்து விட்டது. ஆனால் வருண் முதலில் இருந்ததை விட இப்போது தெளிவாக சிந்தித்து தனித்தன்மையோடு விளையாடுகிறார். நிருப்பை விட வருண் நீடிக்க தகுதியானவர்.

தெளிவான கருத்து
இந்த ப்ரோமோவில் அக்ஷரா ராஜூக்கு வோட் போடக்கூடாதுனு சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு வோட் போடுங்க என்று கேட்டுள்ளார் அக்ஷரா, இதை பார்த்த நெட்டிசன்ஸ், அக்ஷரா வந்ததுக்கு ஒரு முறையாவது தெளிவா ஒரு கருத்துச் சொல்லிவிட்டார் அருமை. என பதிவிட்டுள்ளார்.

தைரியம்
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், தாமரை பாவனிக்கு தைரியம் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு ஒரு நெட்டிசன், மொத்த வீடும் அவளை வளைத்த போதிலும், அவள் வலுவானவானவராகவே இருந்தார். மற்றவர்கள் கொடுத்த அழுத்தத்தின் கீழ் அவர் எப்படி நொறுங்கினர் என்று சிந்தியுங்கள்,பாவனியுடைய ஆதாரம் தைரியம். என பதிவிட்டுள்ளார்.

தாமரை மறந்துப்போச்சா
பாவனியின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தாமரை பற்றி தெரிஞ்சும் காயின் எடுக்க ஹெல்ப் பண்ணாது, வீடு முழுக்க கார்னர் பண்ணியும் தைரியமா அதை பேஸ் பண்ணது. கமலின் முன்னாடி ஆண்களின் பாரபச்சம் பற்றி பேசியது. இதுவரைக்கும் 8 முறை நாமினேஷனில் வந்தும் , தைரியமாக அதை எதிர்கொண்டு சேவ் எனது. என்னா தாமரை மறந்துப்போச்சா. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











