Don't Miss!
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அபிஷேக்கை காப்பாற்ற துடித்த பாவனி… இந்த மனசுதான் சார் கடவுள் என்று பாராட்டிய ரசிகர்கள் !
சென்னை: பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியிலிருந்து அபிஷேக் ராஜா வெளியேறினார்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் 9 பேர் இடம் பெற்று இருந்தனர். இசைவாணி, தாமரை, அக்ஷரா, பாவனி ஆகியோர் காப்பாற்றப்படுவதாக சனிக்கிழமை கமல் அறிவித்தார்.
பிக்பாஸ்
சீசன்
5
போட்டியாளர்களில்
யாருக்கு
அதிக
சம்பளம்
தெரியுமா
?
இதையடுத்து, நேற்று பிரியங்கா மற்றும் அபினய் முதலில் காப்பாற்றப்பட்டதாக அறிவித்த கமல், பின்னர் ஐக்கி காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து அபிஷேக், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அபிஷேக் எலிமினேட்
நேற்றைய எபிசோடில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு இருவரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இதையடுத்து, கார்டை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்து எனக்கு சேதி வந்துவிட்டது. மக்களின் தீர்ப்பை தலைவணங்குபவன் நான் எனக் கூறி அபிஷேக்கின் பெயர் உள்ள கார்டினை கேமிரா முன் காட்டினார் கமல்.

மக்களோட தீர்ப்பு
அபிஷேக் வெளியேறப் போகிறார் என்றதும் பிரியங்கா அப்படியே அழத்தொடங்கி விட்டார். உடனே மற்ற ஹவுஸ்மெட்ஸ், நாங்க காப்பத்துறோம் எங்ககிட்டத்தான் காயின் இருக்கே என்றனர். இதற்கு அபிஷேக் இது மக்களோட தீர்ப்பு மக்கள் இந்த வீட்டில் நான் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள் நான் போகிறேன் என்றார்.

நாணயத்தை பயன்படுத்த முடியாது
இதையடுத்து, பவானி அபிஷேக்கிடம் நான் உன்னை சேவ் பண்றேன் என்கிட்ட காயின் இருக்கு அதை நீ வெச்சிக்கோ என்றார் . மற்ற ஹவுஸ்மெட்கள் காயின் இருக்கு... காயின் இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருந்தார்களே தவிர யாரும் காயின் தர முன்வரவில்லை. ஆனால், பவானி மட்டும் ஓடி சென்று காயினை அபிஷேக் கையில் கொடுத்து கேமிராவில் சொல்லு என்றார். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்க, அப்போது குறுக்கிட்ட பிக் பாஸ் இந்த நாணயத்தை இப்போது பயன்படுத்த முடியாது. எப்போது பயன்படுத்தலாம் என்று சொல்லும்போது மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவித்தார்.

இந்த மனசுதான் சார் கடவுள்
அபிஷேக் வெளியே போகிறார் என்றதும் முதல் ஆளாக காயினை கொடுத்து காப்பாற்ற துடித்த பவானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். காயின் பின்னாளில் தனுக்கு தேவைப்படும் என்ற போதும், அவருக்காக உதவ முன் வந்த அந்த மனுசு இருக்கே அதுதான் சார் கடவுள் என்று அவரது ரசிகர்கள் பாவனியை பாராட்டி வருகின்றனர்.