அடுத்தவர்களை நம்பி… வாழ்க்கையில் நிறைய ஏமாந்து இருக்கேன்… மனம் திறந்த நிரூப் !

சென்னை : பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது. இதற்காக ரெட் டிவி மற்றும் ப்ளு டிவி என போட்டியாளர்கள் இரு அணிகளான பிரிந்து வருகின்றனர்

இதில், நேற்றைய எபிசோடில், ப்ரியங்கா இமான், ப்ரியங்கா தாமரைச்செல்வி மோதல் வெடிக்க, வீடு சண்டை களமானது.

நேற்றைய பிரேக்கிங் நியூஸ் டாஸ்கில் ரெட் டிவி வெற்றி பெற்றது.

இன்றைய எபிசோடில், ப்ளு டிவி செய்தியாளராக ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி இருந்தனர். அதில், சுயம்வரத்தை எதிர்பார்த்து வந்த நிரூப் சுயபுத்தியை இழந்தார் என்ற தலைப்பில் செய்தி வாசிக்கப்பட்டது.

எடக்குமுடக்கான கேள்வி

எடக்குமுடக்கான கேள்வி

நேற்றைய டாஸ்கின் போது ரெட் டிவி எடக்கு முடக்கான கேள்வி கேட்டு பிரியங்கா அண்ணாச்சி இடையே பிரச்சினை ஆனது. அதே போல, தாமரை பிரியங்கா இடையேயும் பிரச்சினை வெடித்தது.

சிரிக்க வைத்த டாஸ்க்

சிரிக்க வைத்த டாஸ்க்

ஆனால், ப்ளு டிவி எந்த பிரச்சினையும் இல்லாமல், நகைச்சுவை உணர்வுடன் பல கேள்விகளை கேட்டு ஹவுஸ்மெட்டுகளை மட்டும் இல்லாமல் பிக் பாஸ் ரசிகர்களையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.

மீண்டும் ஏமாறக்கூடாது

மீண்டும் ஏமாறக்கூடாது

இதையடுத்து, ராஜு , நிரூப்பிடம் நண்பர்கள் உங்களிடம் பாசத்தை காட்டினாளும், நெருங்கி பழகினாலும் அவர்களிடம் பாசத்தை காட்டாமல் அவர்களை தள்ளிவைப்பது ஏன் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த நிரூப், நான் வாழ்க்கையில், அடுத்தவர்களை நம்பி நிறைய விஷங்களில் அடிபட்டு இருக்கேன். மறுபடியும் , அடுத்தவர்களை நம்பி ஏமாறக்கூடாதுனு நினைக்கிறேன்.

எல்லாம் பொய்

எல்லாம் பொய்

மற்றவர்கள் என் மீது காட்டும் பாசம் உண்மையா பொய்யா என்பது இந்த வீட்டில் இருக்கும் வரைக்கும் தெரியாது. நான் அவர்களை நம்பிவிட்டு, அது எல்லாம் பொய் என்று எனக்கு தெரிந்தால், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த காரணத்திற்காகத்தான் அனைவர் இடத்திலும் தள்ளி இருக்கிறேன் என்று கூறினார்.

நட்பு முக்கியம்

நட்பு முக்கியம்

வாழ்க்கையில் நட்பு என்பது மிகவும் முக்கியமானது அந்த நட்பை நான் நிச்சயமாக மதிப்பேன் என்றார்.மேலும் இந்த வீட்டில் நான் அதிகமாக நம்புவது பிரியங்கா மற்றும் ராஜு என்று கூறினார். நிரூப்பின் இந்த பதிலால் அபிஷேக்கின் முகம் அப்படியே வாடிப்போனது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X