அண்ணாச்சியின் தலைவர் பதவியை பறித்த நிரூப்… வித்தியாசமான தண்டனை கொடுத்த பிக் பாஸ் !

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார்.

தற்போது வீட்டில், சிபி, ராஜு,அண்ணாச்சி, வருண், நிரூப்,அமீர், சஞ்சீவ், அபிநய், அபிஷேக், பாவ்னி, பிரியங்கா, அக்ஷரா, தாமரை என 13 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது.

கேப்டன் பதவிக்கான டாஸ்க்

கேப்டன் பதவிக்கான டாஸ்க்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 8 வாரங்களை கடந்து 9வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை என்பதால், பிக் பாஸ் வீட்டில் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட சிபி , அபிஷேக், இமான் அண்ணாச்சி 3 பேர் போட்டி இட்டனர்.

தலைவரானார்

தலைவரானார்

கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தலைவர் பதவிக்கான டாஸ்கில், தலைவர் பதவியில் போட்டியிடும் மூன்று பேரும், கொடுக்கப்பட்ட க்யூப்களை உயரமாக அடுக்க வேண்டும். யார் தலைவராக விருப்பம் இல்லையோ அவரை உயரமாக அடுக்க முடியாத படி மற்ற போட்டியாளர்கள் பந்துகளை எரிந்து தடுக்க வேண்டும். இந்த டாஸ்கில் அண்ணாச்சி உயரமாக கோபுரம் அமைத்து, கடைசிவரை அதன் மீது பந்து படாதபடி பாதுகாத்து போட்டியில் வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் தலைவர் ஆனார்.

நிரூப் தலைவரானார்

நிரூப் தலைவரானார்

நிலத்தின் நாணயத்தை வைத்து இருக்கும் நிரூப், அந்த நாணயத்தை பயன்படுத்தி அண்ணாச்சியின் தலைவர் பதவியை தட்டிப்பறித்து பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆனார். தலைவர் பதவியை தட்டிப்பறித்ததற்காக பிக் பாஸ், நிரூப்பிற்கு வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார்.

குனிந்து பேசனும்

குனிந்து பேசனும்

அதில், இந்த வாரம் முழுவதும் நிரூப் யாரிடம் பேசினாலும், அவர்களின் உயரத்திற்கு கீழே குனிந்து அவர்களின் கண்களை பார்த்து பேச வேண்டும் என்று பிக் பாஸ் பனிஷ்மெட் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் மிகவும் உயரமானவரா நிரூப் தான், அவருடை உயரத்திற்கு அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால் பிக் பாஸ் இந்த வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X