Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீ பயங்கரமா நடிக்கிற … பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் நிரூப் !
சென்னை : இந்த சீசனின் இறுதி நாமினேஷன் வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது. திங்கட்கிழமை என்றாலே, நாமினேஷன் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
அடுத்த வாரம் சீசனின் ஃபைனல்ஸ் என்பதாலும், இது தான் கடைசி நாமினேஷன் என்பதாலும், யாரெல்லாம் நாமினேட் ஆகிறார்கள் மற்றும் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று ஆட்டம் சூடு பிடித்துள்ளது.
டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வெற்றி பெற்ற அமீரை இந்த வாரம் நாமினேஷன் செய்ய முடியாது.
மாரி
செல்வராஜ்
இயக்கத்தில்
உதயநிதி
ஸ்டாலினுக்கு
ஜோடியாகும்
நடிகை
கீர்த்தி
சுரேஷ்!

நாமினேஷன்
இன்றைய போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்கள் கழுத்தில் மாலை அணிவித்து நாமினேட் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிக் பாஸ் இந்த வாரம் டைரக்ட் நாமினேஷனை அறிவித்திருந்தார். இன்றைய முதல் ப்ரோமோவில் ஓப்பன் நாமினேஷன் நடத்தப்படுகிறது. இதில் நாமினேட் செய்பவருக்கு மாலை அணிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதிலும் தாமரை பிரியங்கா இடையே வாக்குவாதம் நடக்கிறது.

அமீர் தாமரை சண்டை
இதையடுத்து வெளியான 2வது ப்ரோமோவில், முட்டை டாஸ்க் பிரச்சினை குறித்து அமீருக்கும், தாமரைக்கும் இடையே மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது. இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். சும்மா கத்தாதீங்க அக்கா. என்னை ஏன் கேட்குறீங்க. என்னை கேட்க உங்களுக்கு உரிமையில்லை என கத்துகிறார் அமீர். என்னை கேட்க உனக்கும் உரிமை இல்லை என கத்துகிறார் தாமரை.

3வது ப்ரோமோ
இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில், பிரியங்காவும் நிரூப்பும் ஒருவரை ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த கேமில் நீ பயங்கர நடிக்கிறனு எனக்கு தொணுது என்று பிரியங்காவை பார்த்து கூறுகிறார் நிரூப். இதற்கு பிரியங்கா கேமை ஒழுங்கா விளையாடவில்லை, குரூப் சேர்க்கிறோம்னு சொல்லுற, ஒழுங்கா எதையாவது சொல்லு என்று கூறுகிறார்.

எப்போதும் சண்டை
நிரூப் டிக்கெட் டு பினாலே டின்னர் டாஸ்கிலே அவர் வெளியேற்றப்பட்டதால், மற்ற போட்டியாளர்கள் மீது அவர் மிகுந்த கோவத்தில் இருக்கிறார். ஏற்கனவே பிரியங்கா மீது செம காண்டில் இருக்கும் நிரூப் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பிரியங்காவிடம் முட்டி மோதி வருகிறார்.