திட்டம் போட்டு நிரூப்பை காலி செய்த பிரியங்கா...குரூப் சேர்ந்து காலி செய்த ஹவுஸ்மேட்ஸ்
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஃபினாலே டிக்கெட் டாஸ்க் மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இதில் ஃபினாலே டிக்கெட் யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே உள்ளது, தற்போது 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
இதில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஃபினாலே டிக்கெட்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று, டின்னர் பார்ட்டியுடன் ஃபினாலே டிக்கெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஃபினாலே டிக்கெட்டை பெற தகுதியில்லாத ஒருவரை தேர்வு செய்து வெளியேற்ற வேண்டும். வெளியேற்றப்படும் நபருக்கு கருப்பு ரோஜாவை வழங்க வேண்டும் என கூறப்பட்டது.

பிசிக்கல் டாஸ்க் இருக்கும்
இதில் பிரியாங்கா, நிரூப்பிற்கு இந்த டிக்கெட் கிடைக்கக் கூடாது என்றார். இனி வரும் வாரங்களில் பிசிக்கல் டாஸ்க் இருக்கும் , உன் கூட இருந்து என்னால் போட்டிப்போட முடியாது இதனால் இந்த டிக்கெட் நிரூப்பிற்கு கிடைக்கக்கூடாதுனு நான் நினைக்கிறேன் என்றார். பிரியங்காவின் பேச்சால் கடுப்பான நிரூப், பிக் பாஸ் இவ என் கூடபோட்டி போட மாட்டாளம், டோர் ஓபன் பண்ணுங்க பிக் பாஸ் நான் வெளியில போகிறேன் இவங்களே விளையாடட்டும் என்று கத்தினார் நிரூப்.

நிரூப்பிற்கு தகுதியில்லை
இதையடுத்து, பிரியங்கா நிரூப் இடையே காரசார விவாதம் நடந்தது. இதையடுத்து, மற்ற போட்டியாளர்கள் நிரூப் பிரியங்காவை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக இணைந்து டிக்கெட் ஃபினாலேவுக்கு தகுதி இல்லாதவர் என்று நிரூப்பின் பெயரை பரிந்துரைத்தனர். இதையடுத்து, கருப்பு ரோஜா அவருக்கு கொடுக்கப்பட்டு நிரூப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
Recommended Video

ராஜதந்திரி பிரியங்கா
பிரியங்கா நிரூப்பை பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். என்ன பேசினால் நிரூப் கோவபடுவார், எதை பேசினார் ஆத்திரப்படுவார் என்பதை நன்றாக தெரிந்துவைத்துள்ள பிரியங்கா, அந்த யுக்தியை சரியாக பயன்படுத்தி நிரூப்பை உசுப்பேத்தி கோபப்படுத்தினார். மற்ற போட்டியாளர்களும் பிரியங்கா சொல்வது சரிதான் என்பதை ஏற்றுக்கொள்ளும்படி சரியாக காயை நகர்த்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். பிரியங்கா உண்மையில் ராஜதந்திரிதான் என நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











