வெளியேறும் முன் அக்ஷரா சொன்ன விஷயம்… எமோஷனல் ஆன ராஜூ!
சென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நேற்று வருண் மற்றும் அக்ஷரா எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் டபுள் எலிமிநேஷன் நடந்துள்ளது.
எலிமினேட் ஆகி வெளியேறும் முன் அக்ஷரா சொன்னதை கேட்டு ராஜூ மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஷாக்காகி விட்டனர் என்றுத்தான் சொல்ல வேண்டும்.

டபுள் எலிமினேஷன்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று ஆரம்பிக்கும் போதே டபுள் எலிமினேஷன் இருக்கு என அறிவித்தார் கமல்ஹாசன். இதனால் பார்வையாளர்கள் இடையே ஒருவிதமான எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

ஓட்டுபோட காரணம்
இதையடுத்து, கமல் எல்லோரையும் இரண்டு இரண்டு பேராக உட்காரச் சொன்னார். மக்கள் ஏன் எனக்கு ஓட்டு போட வேண்டும் என்றும், அருகில் இருப்பவருக்கு ஏன் ஓட்டு போட கூடாது என காரணம் சொல்ல வேண்டும் என கமல் கூறினார்.

நெகிழ்ந்து போன ராஜூ
அப்போது எல்லோரும் வரிசையாக காரணங்கள் கூறி வந்தனர். அக்ஷரா பேசிய போது, இந்த வீட்டில் நான் இத்தனை நாள் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை, இத்தனை நாள் நான் இங்கே இருந்ததற்கு இந்த வீட்டில் இருந்தவர்கள் காரணம் என்றார். மேலும், பேசிய அக்ஷரா, ராஜு அண்ணாவுக்கு ஓட்டு போட கூடாது என சொல்ல என்னிடம் காரணம் இல்லை. அவர் வெற்றி பெற்றால் நான் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன். ஆனால் எனக்கும் ஓட்டு போட்டுடுங்க என்றார். அக்ஷராவின் இந்த பதிலை கேட்டு ராஜூ அப்படியே ஷாக் ஆனார்.
Recommended Video

தாமரை நீ ஜெயிக்கணும்
இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து அக்ஷரா மற்றும் வருண் இருவரும் வெளியேறினர். அப்போதும் ராஜூ அண்ணா நீ ஜெயிக்கணும் என்று கூற நெகிழ்ந்து போன ராஜூ அக்ஷராவின் நெற்றியில் முத்தமிட்டு கண் கலங்கினார். மேலும், தாமரை நீ அழாத நீ ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளு, கோவப்படாம நல்லா விளையாடு என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











