ஓபி அடிக்கும் அண்ணாச்சி… எகிறிய பிரியங்கா... லேட்டஸ்ட் ப்ரோமோ !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், பிரியங்கா அண்ணாச்சி நேருக்கு நேர் சண்டை போட்டுக்கொண்டனர்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று கூறியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 57 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சரியான ஜால்ரா
ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. பல ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் பெண் போட்டியாளர்களுக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று கருத்து பதிவிட்டனர். மேலும், பலர் கமல் சார் நீங்க எப்போ வருவீங்க என்று கேட்டு வருகின்றனர்.

முரண்டு பிடிக்கும்அண்ணாச்சி
இந்நிலையில்,இன்று திங்கட்கிழமை என்பதால் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறுகிறது. இதில், இமான் அண்ணாச்சி வெற்றி பெருகிறார். ஆனால், நிரூப் தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி வீட்டின் தலைவராகிறார். இதனால், நிரூப் சொல்லும் வேலைகளை செய்ய முடியாது என்று அண்ணாச்சி முரண்டுபிடித்து வருகிறார்.

3வது ப்ரோமோ
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், அண்ணாச்சி உங்கள் தலைவர் பதவியை நான் பரித்ததற்காக, நான் சொல்வதை நீங்கள் கேட்காமல் இருப்பது தப்பு என்கிறார் நிரூப். இதையடுத்து கோபத்தில் கத்தும் அண்ணாச்சி, நீ இவங்களுக்கு அதிகாரத்தை கொடுக்குற, இவங்க இதை மிஸ் யூஸ் பண்ணா யார்கிட்ட நான் போய் கேட்பது என்று கூறுகிறார்.

வாக்குவாதம்
அப்போது குறுக்கிடும் பிரியங்காக நான் அப்படி எந்த ரூல்லையும் மிஸ் யூஸ் பண்ணது இல்லை என்று கூற, அண்ணாச்சி ஒரே அடியாக உங்க இரண்டு பேர் மேலையும் எனக்கு டவுட் இருக்கிறது என்று கூறினார். இதனால், கடுப்பான பிரியங்கா, நீங்க எப்படி ஒவ்வொரு வேலையையும் ஓபி அடிச்சிட்டு எஸ்கேப் ஆனீங்கனுக்கு உங்களுக்கே தெரியும் என்று கேட்க, அந்த மாதிரி நான் ஓபி அடிச்சதே இல்லை என்று கத்துகிறார். இதனால், பிரியங்கா அண்ணாச்சிக்கு இடையே காரசாரமான விவாதம் முற்றுகிறது.

ரசிகர்கள் ஆர்வம்
தற்போது வெளியாகி உள்ள இந்த ப்ரோமோவால், அப்போது இன்னைக்கு பிக் பாஸ் வீட்டில் சரியான சம்பவம் இருக்கு என்று இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











