திருக்குறளை திக்கி திணறி படிக்கும் ராஜூ, சிபி.. ஆண் போட்டியாளர்களை கலாய்க்கும் ராஜமாதா !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில், ரம்யா கிருஷ்ணன் ஆண் போட்டியாளர்களுக்கு திருக்குறள் சொல்லும் டாஸ்க் தருகிறார்.

இதில், ராஜூ, சிபி திருக்குறளை சொல்ல முடியாமல் திக்கி திணறுகிறார்கள்அவர்களை பெண் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்காததால் சற்று சுவாரசியம் குறைந்துள்ளது.

போர்டிங் ஸ்கூல்

போர்டிங் ஸ்கூல்

பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரத்தில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறியது. இதில் கண்டிப்பான வார்டனாக சிபி இருந்தார். ராஜூ,அபிஷேக், அமீர் ஆகியோர் ஆசிரியராக இருந்தார். மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாக இருந்தனர்.

சுவாரசியம் குறைவு

சுவாரசியம் குறைவு

கமல்ஹாசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். பாகுபலி ராஜமாத போல பட்டையை கிளப்புவார் என்று பார்த்தால் பஞ்சதந்திரம் மேகீ போல வழிந்து வழிந்து பேசுகிறார். குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று நெட்டிசன்ஸ் சொல்லும் அளவுக்கு அவர் நடந்து கொண்டார்.

ரசிகர்கள் கடுப்பு

ரசிகர்கள் கடுப்பு

அக்ஷரா பொருட்களை தூக்கி போட்டு உடைத்து செய்த கலாட்டாவிற்கு கமலாக இருந்து இருந்தால், சரியான நோஸ்கட் கொடுத்து இருப்பார். ஆனால், நேற்று ரம்யா கிருஷ்ணன் சிபி செய்தது தவறு என்பது போல பேசியது பிஸ்பாஸ் ரசிகர்களை சற்று கடுப்பாக்கியது.

திருக்குறள் டாஸ்க்

திருக்குறள் டாஸ்க்

இதையடுத்து, இன்றைய எபிசோடில் ரம்யா கிருஷ்ணன் வார்டன் மற்றும் ஆசிரியர்கள் நால்வரும் திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுத்தார். இதை ஐந்து நிமிடத்தில் எனக்கு சொல்ல வேண்டும் இல்லன்னா தண்டனை தான் என்கிறார். இதனால் அவர்கள் நான்கு பேரும் திருக்குறளை மனப்பாடம் செய்கிறார்கள்.

திருக்குறள் தெரியாது

திருக்குறள் தெரியாது

ரம்யா கிருஷ்ணனிடம் ராஜூ எனக்கு திருக்குறள் தெரியாது மேடம் என்று சொல்ல அடுத்ததாக வரும் அபிஷேக் எனக்கு தண்டனை கொடுங்க என்று சரண்டர் ஆகிறார். இறுதியாக சிபி திருக்குறளை சொல்ல முடியாமல் தலையை சொரிகிறார். உடனே , மற்ற போட்டியாளர்கள், இவர்கள் நால்வருக்கும், இரவு முழுவதும் வெளியில் படுக்கும் தண்டனை கொடுங்க என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X