“உசுப்பேத்துவது பிரியங்கா தான்“… ஆக்ரோஷமாக கோஷம் போட்ட தாமரை … அலறும் பிக் பாஸ் வீடு !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து விறுவிறுப்பாகக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
முக்கால்வாசி கிணறை நிகழ்ச்சி தாண்டி உள்ள நிலையில், போட்டி பொறமை நாளுக்கு நாள் அதிகரித்து பிக் பாஸ் வீட்டில் அவ்வப்போது குழாய் சண்டை நடந்து வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவிலும், ராஜு மற்றும் பிரியங்கா சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடந்து வருகிறது. இதற்காக போட்டியாளர்கள் அரசியல்வாதியாக மாறி உள்ளனர். நேற்று நடந்த கொடி நடும் டாஸ்கின் போது, அனைத்து கொடி கம்பங்களையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர் உரக்கச்சொல் கட்சியினர்.

ஆத்திரத்தில் கத்திய அபிநய்
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த கொடி கம்பங்களை பிடுங்கும் பணியில் மற்ற கட்சியினர் இறங்கினர். அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொடி கம்பங்களை பிடுங்கினர். இதனை பார்த்த தாமரை செல்வி ஏன்ப்பா இப்படி விளையாடுறீங்க என்று பொதுவாக கேட்டார். இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட அபினய், தாமரையிடம் கடுமையாக கத்தி வீட்டு மூடிட்டு போ என்றார்.

கோஷம் போட்டனர்
பதிலுக்கு தாமரையும் அபிநய்யிடம் கத்தியதால் பிக்பாஸ் வீடு அல்லோகலப்பட்டது . உடனே பிரியங்கா, பாவ்னி, அபிநய்யும் தெரியல தெரியலன்னு சொல்றீங்க... நாடகம் நல்லா போடுறீங்க என தாமரை செல்வியை அட்டாக் செய்து கோஷம் போடுகிறார்கள். இதனால் மனமுடைந்த தாமரை கதறி அழுதார்.

உசுப்பேத்தும் பிரியங்கா
இன்று வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவிலும், நேற்று நடந்த சண்டை குறித்து ராஜு கேள்விகேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா, நான் இந்த வீட்டில் நாடகம் போடுறானுதான் சொன்னேன் ,நான் யாருடைய தொழில் பற்றியும் பேசவில்லை என்றார். அப்போது குறுக்கிடும் தாமரை, நான் வந்து டிராமா பண்ணேனா.. உன்கிட்ட நல்ல பேசுகிற வரைக்கும் என்ன உயர்த்தி தான் பேசுனீங்க... உங்களை எதிர்த்து நான் பேசியதும் என்னை மட்டம் தட்டுறீங்க... இந்த வீட்டில் உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும் தான்... உசுப்பேத்துவது பிரியங்கா மட்டும் தான் என கத்துகிறார் தாமரை... அவரை வெறுப்பேத்துவது போல உரக்கச் சொல் ...உரக்கச் சொல் என்பது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஸோ இன்னைக்கும் பிக் பாஸ் வீட்டில் தரமான சம்பவம் இருக்கும் போல,


Click it and Unblock the Notifications











