அடுக்கடுக்கான கேள்வி கேட்ட தாமரை… பதில் சொல்ல முடியாமல் திணறிய பிரியங்கா !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியை வாரம் முழுவதும் பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் ஒளிப்பரப்பாகும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார்கள்.
கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ் உடன் உரையாடுவார். வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை வைத்து பஞ்சாயத்தை கூட்டி விசாரிப்பார்.
ஆனால் இந்த வாரம் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருக்கும் காரணத்தினால் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கேப்டனாகும் தகுதி இல்லை
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில்,கேப்டன் டாஸ்கில் நடந்ததை பற்றி ரம்யா கிருஷ்ணன் தாமரையிடம் கேட்டார். கேப்டனாக தகுதி இல்லை என்று பிரியங்கா சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை மேடம். இந்த வீட்டை கூட்டுவது, பெருக்குவது, சாப்பிடுவது தவற இன்னும் ஒன்னும் இருக்கு என்று பிரியங்கா சொன்னாங்க, அது என்ன என்பதை சொல்ல சொல்லுங்க மேடம் என்று தாமரை மூச்சை பிடித்துக்கொண்டு பேசினார்.

தாமரை அடுக்கடுக்கான கேள்வி
ஒரு வேலையை கொடுக்கும் முன்பே இந்த வேலைக்கு தகுதி இல்லை என்று எப்படி சொல்லலாம் முடியும் என்றும் தாமரை கேள்வி கேட்டார். தாமரையின் அடுக்கடுக்கான கேள்வியால் பிரியங்கா ஒரு கட்டத்தில் திணறிபோனார்.

காழ்ப்புணர்ச்சி இல்லை
இதையடுத்து, பேசிய பிரியங்கா, தலைவராக இருக்கும் போது, யார் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துக்கொள்ளக்கூடாது அதனால் அவர்களுக்கு தலைவர் ஆகும் தகுதி இல்லை என்று கூறினேன் என்று பிரியங்கா கூற, நான் யார் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை, நான் எனக்கு கொடுத்த வேலையைத்தான் செய்கிறேன் என்றார்.

அனைவருக்கும் தகுதி இருக்கு
இதையடுத்து பேசிய ரம்யா கிருஷ்ணன், கேப்டனாகும் தகுதி இந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருக்கு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்ல முடியாது என்றார். பிரியங்கா தான் எனக்கு இந்த கேம், என்ன என்பதை சொல்லிக்கொடுத்தார் என்று பிரியங்காவை தலையில் தூக்கி வைத்து ஆடி வந்த தாமரை. ரம்யா கிருஷ்ணன் முன்பே இப்படி பேசியதை பார்த்து போட்டியாளர்கள் ஆடிப்போய் விட்டனர்.


Click it and Unblock the Notifications











