என்னம்மா சிண்டு முடியுற... பிரியங்காவிற்கு எதிராக கொந்தளித்த தாமரை!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அக்ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இத்தனை நாளாக நகமும் சதையுமாக இருந்த பிரியங்கா மற்றும் தாமரை கடந்த வாரத்திலிருந்து எலியும் பூனையுமாக மாறி உள்ளனர்.
தாமரை எது செய்தாலும் குற்றம் என்பது போல பிரியங்கா அவரை டார்கெட் செய்து வருகிறார். பிரியங்காவின் இந்த செய்கையால் நாளுக்கு நாள் அவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது.

பிக்பாஸ்
வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார்.

பிரேக்கிங் நியூஸ்
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் நடக்கும் விஷயத்தில் பல விஷயங்களை காட்டுவதில்லை என போட்டியர்களே ஒருகருத்து நிலவி வருகிறது. இதனால், போட்டியாளர்களுக்கு தங்களது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக மாறி ரெட் டிவி, ப்ளு டிவி என இரு செய்தி சேனலாக மாறினர். இந்த விளையாட்டின் போது, இமான் நேற்று கூறியதை மனதில் வைத்துக்கொண்டு பிரியங்கா அவரை பல கேள்விகளை கேட்டார்.

பாசம் இருக்கு
தாமரை பற்றி பேசிய பிரியங்கா, கேம் தெரியாதுனு நடிக்குறாங்க, நேரத்திற்கு ஏத்தமாதிரி மாறிடுறாங்க என்றார். இதையடுத்து பேசிய தாமரை, பிரியங்கா மேல எனக்கு பாசம் இருந்தது. இந்த கேமை சொல்லிக்கொடுத்ததே அவங்க தான் இதை என்னைக்கும் மறக்க மாட்டேன் என்றார்.
Recommended Video

சிண்டு முடியுற
ஆனால்,நம்ப பேச்சு மட்டும் தான் உயர்ந்தா இருக்கனும் மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழானு என நினைப்பது பிரியங்காத்தான் என்றார். இதையடுத்து, பாவ்னியிடம் ஏதோ தாமரை கேட்க, பிரியங்காதான் சொன்னாங்க என்று அவர் கூறினார். இதையடுத்து தாமரை, பிரியங்காவிடம் என்னம்மா... சிண்டு முடியுற வேலை பார்க்குற... நீ பயங்கரமான ஆளா இருக்கியே என்று ஆத்திரத்தில் கத்துகிறார்.


Click it and Unblock the Notifications











