நிரூப்பின் அன்பு பரிசு… நெகிழ்ந்த பிரியங்கா… கடைசியில் அன்பு தான் ஜெயித்தது !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பத்தில் மினி அன்பு டீம் ஆரம்பித்து தனிக்கூட்டணியுடன் செயல்பட்டு வந்தார்கள் பிரியங்கா, நிரூப், அபிஷேக்.
ஒன்றாகவே சுற்றிவந்த இந்த கூட்டணியை பார்த்து மற்ற போட்டியாளர்களே குரூப் சேர்ந்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்கள்.
ஆனால் , அபிஷேக் வெளியே போன பிறகு அன்பு கூட்டணி முறிந்து நிரூப் பிரியங்கா இருவரும் எலியும் பூனையுமாக மாறி அவ்வப்போது சண்டைப்போட்டுக் கொண்டனர்.

நிரூப் பிரியங்கா சண்டை
பஞ்சதந்திர டாஸ்கில் பிரியங்காவிடமிருந்து காயினை நிரூப் எடுத்துக்கொண்டதை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை பூதாகரமாகியது. எந்த பிரச்சினை என்றாலும் பிரியங்கா அதில் மூக்கை நுழைப்பார் என்றும் அந்த வீட்டில் அவள் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்றும் நிரூப் வெளிப்படையாகவே பல நேரத்தில் கூறியிருக்கிறார்.

மன்னிப்பு
கயிறு டாஸ்கின் போது கூட நிரூப்பை சீண்டி அவரை போட்டியிலிருந்து வெளியேற வைத்ததே பிரியங்கா தான். அப்போது நடந்த சண்டையில் கூட நிரூப், உனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை குழித்தோண்டி புதைச்சிடுவே என்று பிரியங்காவைப் பார்த்து கூறியிருந்தார். இதை கமல் கண்டித்ததை அடுத்து அவரின் முன்னிலையிலே பிரியங்காவிடம் மன்னிப்பும் கேட்டார்.

அன்பு பரிசு
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், வீட்டில் நீங்கள் விரும்பும் நபருக்கு அன்பு பரிசளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறியுள்ளார். பிரியங்கா என் அன்பு பரிசு கோபாலுக்குத்தான் என்று ராஜுவிற்கு பரிசளிக்கிறார். அதேபோல, என்னை இரிடேட் செய்த நிரூப்பிற்கு என் அன்பு பரிசு என்று நிரூப்பிற்கு பரிசளிக்கிறார் பாவனி. இதை அருகில் இருக்கும் அமீர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
Recommended Video

நெகிழ்ந்த பிரியங்கா
என் அம்மா எனக்கு கொடுத்தது, இதை எப்போதும் கழட்டாதேனு சொன்னாங்க அதை நான் உனக்கு தருகிறேன் என்று நிரூப் கையில் அணிந்திருந்த தங்க கை செயினை பிரியங்காவுக்கு அன்பு பரிசாக அளிக்கிறார். இதைசற்றும் எதிர்பாராத பிரியங்கா கண் கலங்கி நிரூப்பை கட்டி அணைத்துக் கொள்கிறார். என்னத்தான் இவர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும் இருவர் மனதிலும் இருந்த அன்பை மறுக்க முடியாத ஒன்று.


Click it and Unblock the Notifications











