டாப் 5 போட்டியாளர்கள் ? … இந்த வார டேஞ்சர் ஜோனில் இருப்பது யார்?
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருவாரமே உள்ளது. இதில் டைட்டில் வின்னராகப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
முந்தைய சீசன்களில் யார் வெற்றிவாகை சூடுவார் என்று முன்னமே யூகிக்க முடிந்தது ஆனால், இந்த சீசன் இறுதிகட்டத்தை எட்டிய பின்பும் யூகிக்க முடியாமல் இருக்கிறது.
தற்போது வீட்டில் 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள் இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

சிபி வெளியேறினார்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. முதலில் 3 லட்சமாக இருந்த பணம், 5 லட்சம், 6 லட்சம் என அதிகரித்து இறுதியான 12 லட்சம் ரூபாய் வரை சென்றது. இதையடுத்து, பணத்தை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறினார். இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்த சிபி கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார்.

டேஞ்சர் ஜோன்
பணப்பெட்டி வந்ததிலிருந்தே நான் எடுத்துவிடுவேன் என்று கூறிக்கொண்டு வந்த நிரூப் பணப்பெட்டியை தொட்டு தொட்டுப்பார்த்து விட்டு கோட்டைவிட்டு விட்டார். எப்படியாவது பைனலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் நிரூப்பிற்கு அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது நிரூப்தான். அவருக்குத்தான் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் இவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது.

வெளியேறுவார்
மேலும், 2வது பைனஸிட் தேர்வு இன்று நடக்க இருக்கிறது. இதில் யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேலை நிரூப், நேரடியாக பைனாலுக்கு தேர்வு செய்யப்பட்டால் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பாவனி வெளியேறுவார். ஆனால், பிரியங்கா நிரூப் பைனலுக்கு அனுப்ப முன்வரமாட்டார் என்பதால் இந்த வாரம் நிச்சயம் நிரூப் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
Recommended Video

டாப் 5 போட்டியாளர்கள்
இதையடுத்து, டாப் 5 போட்டியாளர்களாக ராஜு, அமீர், தாமரை, பிரியங்கா, பாவனி இருப்பார்கள் என்றும், இதில், ராஜு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுப்படுகிறது. இதேபோல பிரியங்கா 2வது இடத்திலும், தாமரை, அமீர், பாவனி அடுத்த இடங்களை பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











