Don't Miss!
- Sports
இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி
- Finance
2022-ல் வங்கி மோசடி மிக அதிகம், ஆனால் அதிலும் ஒரு மகிழ்ச்சியான தகவல்!
- Lifestyle
வறுத்த நிலக்கடலை Vs பச்சை நிலக்கடலை - இவற்றில் எது சிறந்தது?
- News
தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு தடை... 4 பேரை கைது செய்த காவல் துறை
- Technology
ISRO: 10 வயதுக்கு மேற்பட்டவர் சான்றிதழுடன் இலவச விண்வெளி பாடம் படிக்க வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவுக்கு இவ்வளவு சம்பளமா ?...வெளியான சூப்பர் தகவல்
சென்னை : கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆட்டம், பாட்டத்துடன் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று மாலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ராஜு டைட்டில் வென்றார்.
ராஜு ஜெயமோகன் தான் டைட்டில் வெல்ல போகிறார் என்ற தகவல் ஏற்கனவே கசிந்து விட்டது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பே #RajuWinningHearts, #BiggBoss போன்ற ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டன. இதற்கிடையில் ராஜு டிராபியுடன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி சோஷியல் மீடியாவில் தீயாய் பரவியது.
க்யூட்
புகைப்படங்களை
வெளியிட்ட
தளபதி
பட
இயக்குநர்...
நாய்க்குட்டியும்
அழகு
அள்ளுதே

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்
அனைவரும் எதிர்பார்த்தது போல் ராஜு, டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்பை பிரியங்கா வென்றார். மூன்றாவது இடத்தை பாவனி பிடித்தார். நான்காவது இடத்தை அமீரும், ஐந்தாவது இடத்தை நிரூப்பும் பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்ற ஓட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் பெற்ற சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

தாமரை பெற்ற சம்பளம்
ஏற்கனவே ஃபைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான சிபி ரூ.12 லட்சத்துடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தாமரையும் 98 வது நாளில் வெளியேறினார். இவருக்கு ஒரு வாரத்திற்கு ரூ.70,000 சம்பளமாக பேசப்பட்டதாகவும், மொத்தம் 14 வாரங்களுக்கு அவருக்கு ரூ.9.80 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ரன்னர் அப் பிரியாங்கா பெற்ற சம்பள விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

ராஜுவுக்கு இத்தனை லட்சங்களா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.1.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. 15 வாரங்களுக்கு அவருக்கு ரூ.22.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதோடு டைட்டில் வின்னருக்கான பரிசுத் தொகை ரூ.50 லட்சமும் ராஜுவுக்கு கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ.72.5 லட்சங்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார் ராஜு.

சம்பளத்துல மிஞ்சிட்டாரே
இரண்டாவது இடம் பிடித்த பிரியங்காவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ.2.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதனால் 15 வாரங்களுக்கு அவருக்கு ரூ.37.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு விகிதத்தில் ராஜுவை நெருங்க முடியாமல் போனாலும் சம்பள விஷயத்தில் பிரியங்கா தான் முதலிடத்தில் உள்ளார்.

போட்டியாளர்களின் ஓட்டு விபரம்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி வாரமாக 15 வது வாரத்தில் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்ட 5 பேரும் பெற்ற ஓட்டுக்களின் விபரமும் வெளியாகி உள்ளது. இதில் டைட்டில் வின்னரான ராஜு 57 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பிரியங்கா 24 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளார். பாவனி 8 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்த அமீர் மற்றும் நிரூப் 5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்களையே பெற்றுள்ளனர்.