லவ்வும் இல்ல.. ப்ரண்ஷிப்பும் இல்ல… வேற என்ன உறவு… பாவ்னி முகத்திற்கு நேராக கேட்ட சிபி!

சென்னை : பாவ்னி அபிநய் விவகாரம் குறித்து பேசிய சிபி, லவ்வும் இல்ல... ப்ரண்ஷிப்பும் இல்லனு சொன்னா... அப்போ வேற என்ன உறவுனுதான் நான் கேட்பேன் என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக, ஏதாவது ஒரு லவ் ஸ்டோரி கொத்தாக மாட்டும். இது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

ஆனால் இந்த முறை அப்படி எந்த காதல் ஸ்டோரியும் இல்லாமல் வெறும் பாவ்னி அபிநய்யின் கிசுகிசுக்கள் அவ்வப்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.

பாசத்துடன்

பாசத்துடன்

கடந்த 4 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் போதிலும், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த முறை போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடனும், ஒற்றுமையாகவும் பழகி வந்தனர்.

கிசுகிசு

கிசுகிசு

நாட்கள் செல்ல செல்ல போட்டிகள் நடக்கும் போதும் சரி, மற்ற நேரங்களிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில், சண்டையிட்டு வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே பாவ்னி மற்றும் அபிநய் இருவரின் நட்பையும் பற்றி சில கிசுகிசுப்புகள் தொடங்கியது.

லவ் பண்றியா

லவ் பண்றியா

ட்ரூத் ஆர் டேர் கேமில், ராஜூ , அபிநய்யிடம் நீ பாவ்னியை காதலிக்கிறியா என கேட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கல்யாணமான ஆணிடம் இப்படி கேட்கலாமா என்று பலரும் இணையத்தில் ராஜூவை விளாசி வந்தனர்.

கலங்கிய பாவ்னி

கலங்கிய பாவ்னி

இதையடுத்த, இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடக மாறி உள்ளது. நேற்று டாஸ்கின் போது, ராஜு பாவ்னி மற்றும் அபிநய் நட்பு குறித்து நான் கேட்டதில் எந்த தவறும் இல்லை என்று கேட்டார். இதனால் பாவ்னி இந்த வீட்டில் பேசுவதற்கு வேறுஎதுவுமே இல்லையா என கண்கலங்கினார்.

உரிமை இல்லை

உரிமை இல்லை

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ராஜூவிடம் நேற்று மீண்டும் பிரச்சினையை கிளப்பிய பாவ்னி, நான் அபினய் கூட தனியாக உட்கார்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அது எங்களது விருப்பம் உனக்கு இதை பற்றி பேச உரிமை இல்லை என்று காட்டுத்தனமாக கத்தினார். ஹவுஸ்மெட்டுகள் இதுகுறித்து விளக்கம் கொடுத்தும் பாவ்னி சமாதானம் ஆகவில்லை.

அப்படித்தான் பேசுவேன்

அப்படித்தான் பேசுவேன்

அப்போது குறுக்கிட்டு பேசிய சிபி, லவ்வும் இல்ல... ப்ரண்ஷிப்பும் இல்லனு சொன்னா... அப்போ, வேற என்ன உறவுனுதான் நான் கேட்பேன் என்றார். என் பர்சலை நீங்க எப்படி பேசுவீங்க என்று ஆத்திரத்தில் கத்தினார் பாவ்னி, உடனே பிக் பாஸ் வீட்டில் என்ன பர்சனல் நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். இன்றாவது பிரச்சினை முடிவுக்கு வரும் என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் பாவ்னி அபிநய் பிரச்சினையே பிக் பாஸ் வீட்டில் விவாதப்பொருளாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X