Bigg Boss 6 Tamil: டிடி நீலகண்டன் முதல் தர்ஷா குப்தா வரை.. இத்தனை பேர் பிக்பாஸ்ல கலந்துக்கிறாங்களா?

சென்னை: காடுன்னு ஒன்னு இருந்தா என விக்ரம் படத்தின் டீசர் போல பிக்பாஸ் புரமோவுக்கும் கர்ஜனை குரலுடன் கமல் ஆஜராகி விட்டார்.

பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து அதிரடியாக விலகிய கமல் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த சீசன் பெண் போட்டியாளர்கள் யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில், 10 பிரபலமான பெண் போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிடி நீலகண்டன்

டிடி நீலகண்டன்

அர்ச்சனா, பிரியங்கா என விஜய் டிவி தொகுப்பாளினிகளை பிக் பாஸ் வீட்டில் பிடித்துப் போட்டது போல இந்த 6வது சீசனில் விஜய் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினி டிடி நீலகண்டன் பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக பங்கேற்க போகிறார் என்கிற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. டிடி நீலகண்டன் வந்தால் அவருக்குத் தான்ப்பா டைட்டில் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம், அவருக்கு டஃப் கொடுப்பது போல ஏகப்பட்ட போட்டியாளர்களை இந்த முறை விஜய் டிவி களமிறக்க ஏற்பாடு செய்துள்ளது.

கண்ணம்மா கன்ஃபார்ம்

கண்ணம்மா கன்ஃபார்ம்

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக முதலில் நடித்து ரசிகர்கள் மனங்களை கவர்ந்த நடிகை ரோஷினி ஹரிபிரியன் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

விஜே அஞ்சனா

விஜே அஞ்சனா

டிடி நீலகண்டன் மட்டுமில்ல இந்த முறை இன்னொரு பிரபல விஜேவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சன் மியூசிக் விஜே (அட அவங்க இல்லைங்க) அஞ்சனா இந்த சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாடகி ராஜலட்சுமி

பாடகி ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சூப்பரான ஹிட் பாடல்களை கொடுத்து வரும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பங்கேற்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அவரும் கிட்டத்தட்ட கன்ஃபார்ம் லிஸ்ட்டில் வந்து விட்டார் என்றே நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா


குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷா குப்தா அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே ருத்ர தாண்டவம் மற்றும் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் என இரு படங்களில் கமிட் ஆகி விட்டார். அதன் காரணமாக கடந்த சீசன் பிக் பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த சீசனில் அவர் பங்கேற்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கூறுகின்றனர்.

மனிஷா யாதவ்

மனிஷா யாதவ்

வழக்கு எண் 18/9, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட படங்களில் நடித்த மனிஷா யாதவ் இந்த சீசனில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் மற்றும் சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீனிதி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவங்க எல்லாரும் மிஸ் ஆகாம வந்தால் இந்த சீசன் வேறலெவலில் தெறிக்கும் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X