கதிர் மேலே எனக்கு க்ரஷ்..எலிமினேட் ஆன விஜே மகேஸ்வரி மனம் திறந்த பேட்டி!

சென்னை : பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விஜே மகேஸ்வரி தனக்கு கதிர் மீது ஒரு க்ரஷ் இருக்கிறது என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

சன் மியூசிக் சேனல் தொடங்கிய போதே தொகுப்பாளராக அறிமுகமானவர் விஜே மகேஸ்வரி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியாவில் விஜேவாக இருந்து இருக்கிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

விஜே மகேஸ்வரி

விஜே மகேஸ்வரி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளராக வீட்டிற்குள் வந்த மகேஸ்வரி யாருக்கும் பயப்படாமல் வீட்டில் துணிந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். அதே போல டாஸ்க்கையும் சிறப்பாக விளையாடி வந்த மகேஸ்வரி கடந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்த சீசன் 6 நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக இவர் இருப்பார் என்று நினைத்த நிலையில் இவர் வெளியேறியது ரசிகர்களை சற்று கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மனம் திறந்து பேட்டி

மனம் திறந்து பேட்டி

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரி அளித்துள்ள பேட்டியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில், பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் பெண்களிடம் நடந்து கொண்டவிதம் பற்றி வீட்டில் இருக்கும் போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை இயல்பாக பேசுவது போலத்தான் தெரிந்தது. ஆனால், அவர் நிவாஷினியிடம் நடந்து கொண்டவிதம் வெளியில் வந்து பார்க்கும் போது அது தப்பாகவே உள்ளது என்றார்.

அவரை பிடிக்கும்

அவரை பிடிக்கும்

மேலும்,பிக்பாஸ் வீட்டுக்கு நான் போனதுமே எனக்கு விஜே கதிரவன் மேலத்தான் க்ரஷ் இருந்துச்சு, அமைதியாக அப்படியே க்யூட்டா இருக்கும் பையனை யாருக்குத்தான் பிடிக்காது. கதிர் அனைவரிடமும் அன்பாக பேசுவார், கொஞ்சம் சோர்ந்து உட்கார்ந்தால் நமக்கு ஆறுதல் கூறுவார். இதனால், தீபாவளி அன்று அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன். இதை இத்துடன் நிறுத்திவிடுங்கள் ஆனால், இன்னமும் அவர் மீது எனக்கு க்ரஷ் இருக்கு என்றார்.

ராம் அப்படித்தான்

ராம் அப்படித்தான்

அதே போல, ராமிடம் நான் பேசிய வீடியோவை, பார்த்தேன் அவர் அனைவரிடத்திலும் அப்படித்தான் பேசுவார் என்பதால் தான் என்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவியா? என்று கேட்டேன் மற்றபடி எனக்கு விஜே கதிரைத்தான் பிடிக்கும் என்றார். மேலும், தனலட்சுமி மிகவும் நல்ல விளையாடுறாங்க ஆனால், அவர் கோபத்தை குறைத்துக்கொண்டு கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

அவங்களுக்கும் நல்லது

அவங்களுக்கும் நல்லது

சிங்கப்பூரில் இருந்து இத்தனை பெரிய வாய்ப்பை தேடி பிடித்தாலும், அதை சரியாக நிவாஷினி கொஞ்சம் கூட பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அசல் கோலார் இருந்த வரை அவரால் இவர் ஸ்க்ரீனில் தெரிந்தார். அவரும் இல்லாத நிலையில், இவர் இந்த வாரம் எவிக்ட் ஆவது நிவாஷினிக்கே ரொம்ப நல்லது என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X