போர்வை மூடி முத்தமிட்ட ஜோடி..எல்லை மீறி செல்லும் பிக் பாஸ் வீடு..என்னதான் நடக்குது அங்கே!
சென்னை : போர்வையை போர்த்திக் கொண்டு பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாகும், மனதிற்கு பிடித்த பிரபலங்களின் ஒரு வீட்டில் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்பதை காண ரசிகர்களுக்கு இருந்த ஆர்வமாக இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம்.
இந்தியில் முதலில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ் , தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் இந்தி
இந்தியில் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 15 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 16வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் MeeToo புகாரில் சிக்கிய இயக்குநர் சஜித் கானும் இந்த நிகழ்ச்சியல் கலந்து கொண்டதால் பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தமிழ் பிக் பாஸ்
அதே போல தமிழிலும் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து இந்த மாதம் 9ந் தேதி பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு வாரங்கள் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், முதல் நபராக மெட்டி ஒலி சாந்தி வெளியேறி உள்ளார். வலுவான போட்டியாளராக இருந்த ஜிபி முத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

அட்டகாசம் தாங்கமுடியல
இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த, போட்டோவில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக மெரினா மற்றும் ரோகித் தம்பதிகள் கலந்து கொண்டு வருகிறார். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதால் இவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கமுடியவில்லை.

கட்டிப்பிடித்து முத்தம்
போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார்கள். இவர்கள் இப்படி செய்வதை சக போட்டியாளர்கள் பார்த்து சற்று ஷாக்கானார்கள். என்னத்தான் கணவன் மனைவியாக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவில் இப்படியாக நடந்து கொள்வது என இந்த ஜோடியை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ல் இதுவரை ஏழு பேர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது 14 பேர் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்த சீசன்களை தொகுத்து வழங்கியது போல நாகார்ஜுனே தொகுத்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











