பிக்பாஸ்-6..’என்னை வாடா போடான்னு கூப்பிடக்கூடாது’.. ஆயிஷாவிடம் எகிறிய அசல் கோளார்..கண்ணீர்விட்ட ஆயிஷா
சீரியல் நடிகை ஆயிஷா அசல் கோளாருவை வாடா, போடா என அழைத்தது அவருக்கு பிடிக்கவில்லை என முகத்துக்கு நேராக சொன்னது அயிஷாவிற்கு அவமானமாக போனது.
பிக்பாஸ் சீசன் 6 களைக்கட்ட ஆரம்பித்துவிட்டது. நட்பு டாஸ்க்கில் எதிர்ப்பை காட்டிய அசல் கோளார் தனி ரகம் தான்.
இந்தக்கால மனநிலையில் வாடா போடான்னு ஒரே நாளில் அழைப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் தான், அதைத்தான் அசல் கோளார் பிரதிபலித்துள்ளார்.

யார் யார் என்ன மனநிலை..யார் யார் எப்படிப்பட்டவர்
பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாள் அனைவரும் கேமரா முன் இருக்கும் மனநிலையில் செயல்பட்டதை காண முடிந்தது. பிக்பாஸ் போட்டியாளர்கள் இதற்கு முன் நடந்த போட்டிகளை பார்த்துவிட்டு வந்தாலும், நாளாக-நாளாக அவர்களுடைய இயல்பு தன்மை வெளிப்பட்டு விடும் என்பது எப்போதும் எல்லா சீசன்களிலும் நாம் பார்க்கும் விஷயம். இந்த பிக்பாஸ் சீசனிலும் விரைவில் அதைக்காணலாம். யார் பிரச்சினை செய்பவர், யார் அமைதியானவர், யார் என்ன மனநிலையில் இருப்பவர் என்பதை ஒரு சில நாட்களில் கண்டுபிடிக்க முடியாது.

பிக்பாஸ் போலித்தனம் விரைவில் விலகும்
எல்லோரும் தற்போது தங்களை சிறப்பாக காட்டிக்கொள்ளவே முயற்சி செய்வார்கள். நட்பாக இருப்பது போன்ற தோற்றத்தை தருவார்கள். பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கம், சினிமாத்துறை, தொலைக்காட்சி சார்ந்த பிரபலங்கள் வருவதால் பழகுவதில் வெளிப்படை தன்மை இருக்காது. ஆனால் நாளாக- நாளாக ஒவ்வொருவரின் இயல்பு தன்மையும் வெளிப்படும் இதுதான் பிக்பாஸின் அடிப்படை விஷயம். நேற்று முதல் நாள் என்பதால் அனைவரும் ஜாலியாக ஒவ்வொருவரையும் அன்புடன் பேசியும், உதவி செய்துக்கொண்டும், சிரித்து விளையாடியும் நேரத்தை கடத்தினர்.

ஜி.பி.முத்து கொடுத்த ஆச்சர்யம்
ஜி.பி.முத்துவை இரண்டு மூன்று முறை கலாய்த்தனர். கோபக்காரர் ஜி.பி.முத்து என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் அவர் பொறுமையாக அதை கையாண்டு தன்னுடைய நிலையை விளக்கிச் சொல்லி போட்டியாளர்களை ஆச்சரியப்பட வைத்தார். நேற்று சிறிய டாஸ்கள் கொடுக்கப்பட்டது. இன்று நேற்று இரவு பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில் நீங்கள் யாருடன் பழக விரும்புகிறீர்கள், இதுவரை உங்களுடன் பழகாதவர்கள் யார், நீங்கள் யாருடன் எனது பிக்பாஸ் கடந்தும் ஒரு நட்பை தொடர விரும்புகிறீர்கள் என்பதை காரணத்துடன் விளக்குங்கள் என்று தெரிவித்தார்.

பிக்பாஸ் ஆரம்பித்து வைத்த டாஸ்க்கில் ட்விஸ்ட் கொடுத்த அசல் கோளார்
ஒவ்வொருவரும் அவரவர்கள் நட்பை தொடரும் காரணங்களை அவர் விரும்பும் நபரை அழைத்து விளக்கி கூறினர். இதில் அதிகமான போட்டியாளர்களுக்கு வந்தவர் ஜி பி முத்து என்று சொல்லலாம் இந்த டாஸ்க் நட்பை தொடர்வதற்கான டாஸ்க் ஆனால் இந்த டாஸ்க் அசல் கோளார் ஒரு டிவிஸ்ட் கொடுத்தார். தான் சீரியல் நடிகை அயிஷாவுடன் நட்பை தொடர விரும்புவதாக அவரை அழைத்து அமர சொன்னார். அவருடன் நட்பை தொடர வேண்டும், ஆனால் அவர் வாடா- போடா என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் ஆயிஷா அதிர்ச்சி அடைந்தார். வெளிப்படையாக அனைவரும் முன்னாலும் வாடா-போடா என்று என்னை அழைக்காதீர்கள் அது எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னது அவரை அதிர்ச்சி கொள்ளாக்கியது.

நான் அனுமதி பெற்றுத்தானே வாடா-போடான்னு கூப்பிட்டேன்
"நான் இந்த வீட்டிற்கு வந்தவுடன் உங்களுடன் பேசும்பொழுது உங்களை அப்படி அழைக்கலாமா என்று கேட்டேன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகு தான் நான் அப்படி அழைத்தேன்" என்று ஆயிஷா விளக்கம் கொடுத்தார். நீங்கள் அப்படி அழைப்பது ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆனால் சில இடங்களில் என்னை வாடா-போடா என்று அழைப்பது எனக்கு என்னமோ மாதிரி இருக்கிறது என்று சொன்னார் அசல் கோளார். அப்படியென்றால் வாங்க போங்க என்று அழைக்கிறேன் என்று ஆயிஷா சொல்ல அப்படி அழைக்க வேண்டாம் சாதாரணமாக இருந்தால் போதும் என்று தெரிவித்தார். இதனால் அந்த இடமே சற்று இறுக்கமானது. ஆயிஷா மூட் அவுட்டானார். பின்னர் இருவரும் மாறி மாறி தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்துக் கொண்டனர். ஆயிஷா தான் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கி சொல்ல முற்பட்டார் ஆனால் கடைசிவரை அசல் கோளாறு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தனிமையில் அழுத ஆயிஷா
இதற்கு பின்னும் இந்த விவாதம் வெளியிலும் தொடர்ந்தது அசீம், ஆயிஷா- அசல் கோளாறு இருவருக்கும் சமாதானம் ஏற்படுத்த முயன்றார். ஆயிஷா மிக நல்ல பெண் அவள் எப்போதும் வெளிப்படையாக ஜாலியாக பழகுபவள். எனக்கும் ஆயிஷாவுக்கும் பல ஆண்டுகள் பழக்கம் அந்த அடிப்படையில் சொல்கிறேன் என்று அசல் கோளாறுவிடம் அசிம் நியாயம் பேச அப்போதும் திருப்தி அடையாத அசல் கோளாறு எனக்கு அப்படி பேசுவது பிடிக்கவில்லை ஆகவே அது மாதிரி பேச வேண்டாம் என்று தான் சொன்னேன் என்று தனது தரப்பில் உறுதியாக இருந்தார்.

பிக்பாஸ் திருவிளையாடல் ஆரம்பம்
ஒரு கட்டத்தில் அனைவரும் கலந்து செல்ல, தனிமையைல் தன்னை விடும்படி சொன்ன ஆயிஷா தனிமையில் கண்ணீர் வடித்தார். பின்னர் அவரை சிலர் சமாதானம் செய்ய முயல் ஆயிஷா அதை ஏற்றுக்கொள்வது போல் காட்டிக்கொள்ளாமல் தான் தனிமையில் இருக்க விரும்புவதாக அதை தவிர்த்தார். முதல் நாளே ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ் அவரது திருவிளையாடலை என்று தான் சொல்ல வேண்டும். சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த சீசனில் அடிக்கடி சொல்வார் "பிக்பாஸ் உங்க திருவிளையாடல் ஆரம்பிச்சிட்டீங்களா நடத்துங்க" என்று சொல்வார் அதுபோல் நேற்று நடந்த சம்பவம் ஒரு சுவாரஸ்யமாக இருந்தது ரசிகர்களுக்கு.


Click it and Unblock the Notifications











