பிக்பாஸ் வீட்டில் தவறு செய்தேன்.. உயிரை விடவும் முடிவெடுத்தேன்.. ஐஷு போட்ட ஷாக்கிங் போஸ்ட்
சென்னை: Bigg Boss 7 Aishu (பிக்பாஸ் 7 ஐஷு) பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட ஐஷு போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. முதலில் சென்ற 18 போட்டியாளர்கள் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் என மொத்தம் 23 பேர் இந்த சீசனில் பங்கெடுத்தனர். அவர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேறினார். அனன்யா, வினுஷா, விஜய் வர்மா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டனர்.

ரெட் கார்டு: பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற பேச்சு எழுந்ததாலும்; அவருக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்லி சக ஹவுஸ் மேட்ஸ்களில் பெரும்பாலானோர் சொல்லியதாலும் அவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பிரதீப்பை அவ்வாறு அனுப்பியிருக்கக்கூடாது என்ற கண்டனங்கள் எழுந்தன.
ஐஷு - நிக்சன்: முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லி அவரை வெளியே அனுப்பினார்கள். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் மாயா, பூர்ணிமா ஆகியோர் 18 + ஜோக் அடிக்கிறார்கள்; நிக்சனோ ஐஷுவிடம் எல்லை மீறி நடந்துகொண்டார் அவர்களை எல்லாம் ஏன் வெளியே அனுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.
ரசிகர்களில் பெரும்பாலானோர் கூறியது போலவே பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்சன் ஐஷுவுக்கு நிழலாகவே இருந்தார். அதற்கு ஐஷுவும் அனுமதி கொடுத்தார். உச்சக்கட்டமாக கண்ணாடி வழியாக இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் விவாதமானது. சூழல் இப்படி இருக்க அவர் கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.
குடும்பம் காரணம்: ஐஷு எவிக்ட் செய்யப்பட காரணம் அவரது குடும்பம்தான் என்று கூறப்படுகிறது. அதாவது ஐஷு இனிமேலும் வீட்டுக்குள் இருந்தால் பெயர் கெட்டுவிடும் அதனால் வெளியே அனுப்புங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி கேட்டனர் என்று ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஐஷு போஸ்ட்: இந்நிலையில் ஐஷு பிக்பாஸ் குறித்தும் அந்த வீட்டுக்குள் நடந்த விவகாரம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பியவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். அந்த வீட்டில் காதல், நட்பு என்று சில விஷயங்கள் எனது கண்களை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான். என்னை என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள். எனது குடும்பத்தை விட்டுவிடுங்கள்.
நான் எனது குடும்பத்துக்கே அவமானம். எனது உயிரை விட முடிவெடுத்துவிட்டேன். ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். நான் தவறான விஷயங்களை செய்தபோது அதிலிருது காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், விசித்திரா, அர்ச்சனா, மணி, பிரதீப் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். குறிப்பாக ரெட் கார்டு தூக்கியதற்காக பிரதீப்பிடமும் நான் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். நான் அவருக்கு துரோகம் செய்யவில்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











