Pradeep: நாலு பாரீன் படம் பார்த்து திருடி நல்ல ஸ்கிரிப்டோட வரேன்.. நோ பிக்பாஸ்.. பிரதீப் உறுதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 50வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

Bigg boss 7 famous contestant Pradeep wants to make new script with foreign movies

இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில் விரைவில் வைல்ட் கார்ட் மூலம் 3 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனின் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கலக்கலாக அறிமுகம் செய்திருந்தார் ஆங்கர் கமல்ஹாசன். என்றபோதிலும் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே போட்டியிலிருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆனார்.

ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட பிரதீப்: இந்நிலையில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளனர். இரு வாரங்களுக்கு முன்பு போட்டியாளர் பிரதீப் நிகழ்ச்சியிலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. கமலின் இந்த செயல் பல்வேறு கேள்விகளை உண்டு செய்தது.

பிரதீப் ரீஎன்ட்ரிக்கு ரசிகர்கள் கோரிக்கை: இந்நிலையில் பிரதீப் மீண்டும் போட்டியில் நுழைவார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு பிரதீப்பும் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால் இவரது ரீ என்ட்ரியை பிக்பாஸ் 7 குழுவினர் மறுபரிசீலனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து கமல் தன்னுடைய வாரயிறுதி எபிசோட்களில் எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக தவறு செய்தவர்கள் தண்டனையை பெற வேண்டும் என்று மறைமுகமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

பாரீன் படத்திலிருந்து தமிழுக்கு ஸ்கிரிப்ட்: இந்நிலையில் இன்றைய தினம் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில் தற்போது நான்கைந்து தயாரிப்பாளர்கள் தன்னிடம் கதை கேட்டுள்ளதாகவும் தான் புதிய கதைக்களத்தை உருவாக்கி களத்தில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நக்கலாகவும் இந்த பதிவில் அவர் நான்கைந்து ஃபாரீன் படத்தை பார்த்து திருடி ஒரு நல்ல ஸ்கிரிப்டை ரெடி செய்து படத்துடன் வருவேன் என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வேண்டாம் என பிரதீப் பதிவு: தொடர்ந்து ஆளை விடுங்க, நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு போயிட்டு வரேன் நல்லா இருங்க என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். கோவாவில் நடைபெறும் IFFI 2024 நிகழ்ச்சியில் பங்கேற்க தான் கிளம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் நல்ல படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் இந்தப் பதிவின்மூலம் யாரை மறைமுகமாக தாக்குகிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X