மகளையும் விட்டு வைக்காத வனிதா… ஜோவிகாவின் ஹாட் புகைப்படம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை வனிதா, தனது மகள் ஜோவிகாவை எப்படியாவது ஹீரோயின் ஆக்கியே தீரவேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக மகள் ஜோவிகாவிற்கு குட்டை உடையை மாட்டி விட்டு விதவிதமான போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவர் ஆரம்ப காலத்தில் தமிழில் ஓரிரு படங்களில் நடித்து வந்த போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து வந்த வனிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற வனிதா, அந்த நிகழ்ச்சியில் தன்னால் தொடர முடியாது என்று கூறி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

வனிதாவின் மகள் ஜோவிகா: இந்த நேரத்தில் தான் வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் கல்வி குறித்த விசித்ராவுடன் அவரது வாக்குவாதங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்துக்களை போல்டாக பேசி ரசிகர்களை கவர்ந்த ஜோவிகா 64 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, இயக்குநர் பார்த்திபனிடம் துணை இயக்குநராக இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியானது.

செம ஹாட் மச்சி: ஜோவிகா இயக்குநராக மாறுவாரா அல்லது அம்மா போல நடிகையாக மாறுவாரா என்ற கேள்வி அவரின் ரசிகர்களிடம் இருந்த நிலையில், படு கவர்ச்சியாக இருக்கும் ஜோவிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ஜோவிகா தனது மொத்த அழகையும் காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் வாவ் சூப்பர் என்று கூறினாலும், சிலர் பிக்சர் குவாலிட்டியே சரியில்லை. இப்படி பிளர் அடிக்குதே என்றும், உன்னையும் விட்டுவைக்கலயா என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











