Bigg Boss 7 -கதை சரியில்லை..பவா செல்லதுரையை டார்கெட் செய்த ஹவுஸ் மேட்ஸ்..இரண்டாம் கதையிலேயே இப்படியா?
சென்னை: Bigg Boss 7 Bava Chelladurai (பிக்பாஸ் 7 பவா செல்லதுரை) பிக்பாஸ் 7ல் பவா செல்லதுரை சொன்ன கதைக்கு எதிராக ஹவுஸ் மேட்ஸ் திரும்பியிருக்கின்றனர்.
பிக்பாஸ் 7 ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. சப்பாத்தி குருமா விஷயத்தில் கேப்டன் விஜய்யுடன் பிரதீப் ஆண்டனி வாக்குவாதம், கூல் சுரேஷ் தன்னை இண்ட்டிமேட்டாக பார்க்கிறார் என்று மாயா ஆரம்பித்த பஞ்சாயத்தில் விஷ்ணு தலையிட்டது, அனன்யா உடம்பில் இருக்கும் டாட்டூவை விசித்திரா காட்ட சொன்னது என பிக்பாஸ் வீடும் ஸ்மால், பாஸ் வீடும் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

பவா செல்லதுரை சொன்ன கதை: இந்த சூழலில் இன்று பவா செல்லதுரை ஹவுஸ் மேட்ஸுக்கு பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கதையை கூறினார். அந்தக் கதையில் பாலசந்திரன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற சாராம்சம் இடம்பெற்றிருந்தது. கதை முடியும்வரை ஹவுஸ் மேட்ஸ் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
கதை முடிந்ததும் பவா செல்லதுரையிடம் பிரதீப் ஆண்டனி கண் கலங்கியபடி நீங்கள் எனக்கு ரோல் மாடல் உங்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் எச்சில் துப்புவது போன்ற விஷயங்களை நான் ஒருமாதிரி எடுத்துக்கொள்வேன். மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று கூறினார்.
மாற்றிக்கொள்ள முடியாது: அதற்கு பதிலளித்த பவா செல்லதுரை, இது என் இயல்பு. அந்த கடவுளே என் எதிரில் வந்து நின்றாலும் என்னுடைய இயல்பை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று தடாலடியாக தெரிவித்தார். அதனையடுத்து விஷ்ணுவும் அவரிடம் ஏன் நீங்கள் மாற்றிக்கொண்டால் என்ன. வாழ்க்கை என்பது கற்றுக்கொள்ளுதல்தானே என கூற; பவா செல்லதுரையோ ஒருவரின் நியாயத்தை இன்னொருவரிடம் புகுத்தாதீர்கள்; திருடனுக்கும் நீதிபதிக்கும் ஒரே நியாயம் இருக்க முடியாது. உடனே மாற்றிக்கொள்ள முடியாது என்று முடித்தார்.
அது என்ன கதை: ஒருபக்கம் இந்த விவகாரம் ஓடிக்கொண்டிருக்க மாயாவும், பூர்ணிமாவும் இந்த கதையில் உடன்பட முடியவில்லை என தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மேலும் அவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால், ஒரு தவறு செய்துவிட்டு அதை ஒத்துக்கொண்டால் அது சரி என்பதுபோல் ஒரு ஃப்ளேவர் இருக்கிறது என பேசினர்.
பொறுப்பு தேவை: இந்த சூழலில் பவா செல்லதுரையிடம் வந்த விசித்திரா, நீங்கள் ஒரு கதை சொல்லும்போது பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பாதியிலேயே நிப்பாட்டுவதுபோல் எனக்கு தோன்றுகிறது. உங்கள் கதையில் நிறைய நெகட்டிவ் இருப்பதுபோல் தோன்றுகிறது. கதையை கேட்டு யாரோ ஒருவர் திருந்தலாம்.
ஆனால் நீங்கள் சொல்வது வேறு மாதிரி அவரின் தலையில் உட்கார்ந்திட கூடாது என்று கூற; பவாவோ நான் கதை சொல்லவில்லை நான் படித்ததைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு ஏற்பட்ட ஃபீலிங் வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று கேளுங்கள் என சொல்ல எனக்கு வந்ததை மட்டும்தான் நான் சொல்ல முடியும் என்று பவாவிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் வந்த ஜோவிகா இந்த கதையில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என கேட்டார். உடனே பதிலளித்த பவா செல்லதுரை, 'இந்த கதை நான் ஏன் சொன்னேன் என்றால் அவ்வளவு பெரிய புகழ் உடையவர் நேர்மையாக அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார் என்பதைத்தான். இங்கு யாரும் பெரிதாக அப்படி பதிவு செய்யவில்லை. கண்ணதாசன் மட்டும்தான் வனவாசம் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். பாலசந்திரனின் அனுபவத்தை நான் சொல்லவில்லை. அவருடைய நேர்மையைத்தான் சொன்னேன்.

ஒரு எழுத்தாளரால் யாருக்கும் கன்க்லுயூசன் தர முடியாது. நீங்கள் உங்களுக்குள் பேச வேண்டும் என சொல்ல; ஜோவிகாவோ நான் அப்படி பேசும் இயல்பு உடையவள் இல்லை என கூற; இல்லை நீங்கள் பேச வேண்டும் என பவா சொல்ல ஆரம்பிக்கும்போதே; அப்படி நான் பேசமாட்டேன். நீங்கள் சொன்னதை உங்களிடம்தான் வந்து கேட்பேன் என சொன்னார்.
உடனே பவா செல்லதுரை சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டார். இந்த சீசனில் பவா செல்லதுரை உள்ளே நுழைந்ததை அடுத்து பல கதைகளை சொல்லப்போகிறார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அவர் கூறிய இரண்டாவது கதையே அவருடன் ஹவுஸ் மேட்ஸ் வாக்குவாதம் செய்யும்படி அமைந்துவிடும் என்பது யாரும் எதிர்பார்க்காதது. இதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கிறார்கள் போல. இன்னும் என்ன நடக்கப்போகிறதோ.. பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











