Pradeep: ஜோவிகா ஜெயிக்க உங்க ஹெல்ப் தேவையில்லை.. வனிதாவை மறைமுகமாக தாக்கிய பிரதீப்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது.

கடந்த 6 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

Bigg boss 7 shows ex contestant Pradeep reacts on Vanitha Vijayakumars Complaint

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 6 சீசன்களை வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சி நடத்தி முடித்துள்ள நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்கள் தவிர்த்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர்.

பிரதீப் எலிமினேஷன்: சில வாரங்கள் டபுள் எவிக்ஷனும் போட்டியில் காணப்படுகிறது. முன்னதாக போட்டியாளர் விஜய் வர்மா ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பிரதீப்பும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஹவுஸ்மேட்ஸ் குற்றம் சாட்டி வாக்குகளை பதிவு செய்த நிலையில் கமல்ஹாசன், பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்தார்.

பிரதீப்பிற்கு ரசிகர்கள் சப்போர்ட்: இந்நிலையில் பிரதீப்பின் எவிக்ஷனில் மாயா அண்ட் கேங் பெரிய சம்பவத்தை செய்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர். பிரதீப் எலிமினேஷனுக்கு கண்டனங்களையும் பதிவு செய்தனர். இதனால் அவருக்கு சப்போர்ட் அதிகமாக காணப்பட்டது. அவர் மீண்டும் போட்டியில் இணைவாரா என்ற கேள்வியும் எழுந்தது. தான் மீண்டும் போட்டியை சிறப்பாக ஆட விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Bigg boss 7 shows ex contestant Pradeep reacts on Vanitha Vijayakumars Complaint

தாக்கப்பட்டதாக வனிதா புகார்: இந்நிலையில் பிரதீப்பின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜோவிகாவின் அம்மாவும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் குற்றம் சாட்டியிருந்தார். முகத்தில் காயத்துடன் அவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கண்டனங்களையும் பதிவு செய்தனர். பிக்பாஸ் குறித்து அவர் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பதிலடி கொடுத்த பிரதீப்: தற்போது கோவாவில் நடந்துவரும் திரைப்பட விழாவில் இருப்பதாக பிரதீப் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது புதிய பதிவில் வனிதாவிடம் பேசுவதாக, உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெளிவாக தெரியாது என்றும் ஆனால் அதற்காக வருந்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரெஸ்ட் எடுங்க, ஜோவிகா ரொம்ப ஸ்மார்ட், அவராகவே ஜெயிப்பார், உங்க ஹெல்ப் அவருக்கு தேவையில்லை என்றும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை அவர் உடனடியாக டெலிட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X