Big Boss Tamil 7 - நண்பர் வழியை ஃபாலோ செய்யும் பிரதீப் ஆண்டனி.. கைகொடுப்பாரா பிக்பாஸ்.. முழு விவரம் உள்ளே
சென்னை: Big Boss Pradeep Antony (பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனி) நடிகர் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். இவர் நடிகர் கவினின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 7 இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்றிலிருந்து நூறு நாட்களுக்கு கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சமே இருக்காது என்பதை உறுதியாக சொல்லலாம். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். கடந்த சீசன் போன்று இந்த சீசனும் களைகட்டுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இரண்டு வீடுகள்: இந்த சீசன் மொத்தம் இரண்டு வீடுகளில் நடக்கவிருக்கிறது. எனவே ரூல்ஸுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன மாதிரியான ரூல்ஸ்கள் மாற்றப்பட்டிருக்கிறது என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். இதில் மொத்தம் 18 பேர் கலந்துகொள்கின்றனர். அப்பாஸ், சோனியா அகர்வால், ஷாம், பப்லு என பெரிய திரை பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட சூழலில் அவர்கள் யாருமே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
இதுதான் லிஸ்ட்: பிக்பாஸ் வீட்டுக்குள் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, மாயா கிருஷ்ணன், சரவணன் விக்ரம், விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், யுகேந்திரன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
பிரதீப் ஆண்டனி: இந்த சூழலில் லிஸ்ட்டில் இருக்கும் பிரதீப் ஆண்டனி யார் என்பது குறித்து பார்க்கலாம். சென்னையில் பிறந்த பிரதீப் ஆண்டனி நடிப்பின் மீது தீராத ஆர்வத்தில் இருந்தவர். பல முயற்சிக்கு பிறகு அருவி படத்தின் மூலம் அடையாளப்பட்டார். அதன் பிறகு வாழ் படத்தில் நடித்தார். வாழ் படத்தில் பிரதீப்பின் நடிப்பு மெருகேறியிருந்ததாக பலரும் கூறினர்.

டாடா: பிரதீப் ஆண்டனியை இன்னும் பரவலாக அறிய செய்தது டாடா திரைப்படம்தான். கவின், அபர்ணா தாஸ் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது அனைவரும் அறிந்தது. அந்தப் படத்தில் கவினின் டீமில் ஒருவராகவும், அபர்ணா தாஸை க்ரஷ்ஷாக நினைத்துக்கொண்டும் நடித்திருப்பார். குறிப்பாக கவினின் மனைவிதான் அபர்ணா தாஸ் என்பது தெரியாமல் கவினிடமே அபர்ணாவை பற்றி பேசும் இடத்தில் தனது நடிப்பில் அப்ளாஸை அள்ளியிருந்தார்.
கவினின் நண்பர்: பிரதீப் ஆண்டனி கவினின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பிக்பாஸ் மூலம் எப்படி கவின் ரீச் ஆனாரோ அதேபோல் நாமும் ரீச்சாகிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அந்த நம்பிக்கையை பிக்பாஸ் காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











