Bigg Boss Tamil 7: அப்பாஸ் முதல் சோனியா அகர்வால் வரை.. இந்த 18 பேர் பிக் பாஸ் சீசன் 7க்கு வராங்களா?

சென்னை: பிக் பாஸ் ரசிகர்களை கவரும் விதமாக அதிரடி ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பல வித்தியாசங்களையும் பிரபல நடிகர்களையும் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில சீசன்களாக பரிட்சையம் இல்லாத நபர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததால் தான் ரசிகர்கள் பெரிதும் கனெக்ட் ஆகவில்லை என்றும் டிஆர்பி குறைந்து விட்டதாகவும் கூறினர்.

Bigg Boss 7 Tamil: Launch Date update and 18 Contestant Full list is here

இந்நிலையில், இந்த முறை பிக் பாஸ் வீட்டையே இரண்டாக மாற்றியது மட்டுமின்றி அப்பாஸ், சோனியா அகர்வால் போன்ற பல பிரபலங்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களாக களமிறக்கப் போவதாக ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பம் எப்போ?: கமல்ஹாசன் டபுள் ஆக்‌ஷன் கொடுத்து அதிரடி ப்ரோமோவில் நடித்த நிலையில், நேற்று வெளியான அந்த ப்ரோமோ டிரெண்டாகி வருகிறது. வரும் அக்டோபர் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் நிகழ்ச்சியை ஆரம்பிப்பார்கள் என்பதால், அக்டோபர் 8ம் தேதியே பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பை விஜய் டிவி அறிவிக்கும் என தெரிகிறது.

18 போட்டியாளர்கள் மொத்த லிஸ்ட்: பிக் பாஸ் சீசன் 7 மொத்தம் 105 நாட்கள் நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த முறை ஒட்டுமொத்தமாக 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் ஆரம்ப நிகழ்ச்சியிலேயே அந்த வீட்டுக்குள் செல்லப் போவதாக கூறுகின்றனர். போட்டியாளர்களின் பெயர்கள் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

அப்பாஸ் முதல் சோனியா அகர்வால் வரை: இந்த சீசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற இந்த 18 போட்டியாளர்கள் தான் தேர்வாகி உள்ளதாக ஒரு தகவல் லீக் ஆகியுள்ளது.

1. அப்பாஸ்
2. சோனியா அகர்வால்
3. ரஞ்சித் - பாலிமர் செய்தியாளர்
4. சந்தோஷ் பிரதாப்
5. தர்ஷா குப்தா
6. விஜே பார்வதி
7. ரேகா நாயர்
8. அம்மு அபிராமி
9. விஜே ரக்‌ஷன்
10. ஜாக்குலின்
11. ஷர்மிளா - பஸ் டிரைவர்
12. பப்லு
13. காக்கா முட்டை விக்னேஷ்
14. கல்லூரி அகில்
15. நிலா - மாடல்
16. தினேஷ் - ரச்சிதா கணவர்
17. ஸ்ரீதர் மாஸ்டர்
18. ரவிக்குமார் - மாடல்

என 18 பேர் பட்டியல் வலம் வருகின்றன. ஆனால், இதில் சிலர் கன்ஃபார்ம் என்றும் சில பெயர்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய சீக்கிரமே உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள் பெயர் இந்த முறை அடிபட்டு வரும் நிலையில், அவர்கள் அத்தனை பேரும் மிஸ் ஆகாமல் வந்தால், மீண்டும் டிஆர்பியில் முதலிடத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X