Bigg boss 7 show: லபோ லபோ லபோன்னு கத்துறீங்க.. என்ன அர்ச்சனா இப்படி ஆயிட்டாங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. முன்னதாக 6 சீசன்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இன்றைய நாளில் 60வது எபிசோடில் நுழைந்துள்ளது.

Bigg Boss 7 Tamil Promo 2 Today (Nov 30th 2023): Archana in Angry Mode With Vishnu,Raveena and Poornima

நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலமாக இதுவரை 7 போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில் அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டவர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தற்போது 7வது சீசனில் வெற்றிகரமாக அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி: இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக இரு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் முதல் வாரத்திலேயே குறைவாக வாக்குகள் பெற்று அனன்யா எலிமினேட் ஆனார். விஜய் வர்மா மற்றும் பிரதீப் இருவரும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் பிரதீப்பின் எலிமினேஷன் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது நிகழ்ச்சியிலிருந்து முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட விஜய் வர்மா மற்றும் அனன்யா வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் நிகழ்ச்சிக்குள் என்ட்ரி ஆகியுள்ளனர்.

பிரதீப் எலிமினேஷன் சர்ச்சை: அதேபோல பிரதீப்பும் நிகழ்ச்சியில் மீண்டும் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து எதையும் பேசாத கமல்ஹாசன், குற்றம் செய்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று மறைமுகமாக இந்த விஷயம் குறித்து பேசினார். இந்நிலையில் நித்தம் ஒரு டாஸ்க், பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் என நிகழ்ச்சி சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சி இன்றைய தினம் 60வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

60வது நாளில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான முதல் ப்ரமோவில் நிக்சனிடம் ரூல் பிரேக் குறித்து பேசுகிறார் மாயா. தொடர்ந்து அவருக்கு நிக்சனும் பதிலடி கொடுப்பதாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில் அர்ச்சனாவை ரவீனா அதிக்கப்படியாக டென்ஷனுக்குள்ளாக்கியதை பார்க்க முடிந்தது. ரவீனா இயல்பாக பேசினாலும் அர்ச்சனாவின் ஈகோவை தூண்டி விட்டதை இந்த ப்ரமோ சுட்டிக் காட்டியது.

ஆக்ரோஷமான அர்ச்சனா: அர்ச்சனா, விஷ்ணு மற்றும் பூர்ணிமா மூவரும் உட்கார்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருக்கையில், அங்கு வரும் ரவீனா, விஷ்ணுவிடம் ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆகாதீங்கண்ணா, சண்டை போடுங்க என்று பற்ற வைக்கிறார். இதனால் கடுப்பான அர்ச்சனா, தான் எமோஷனலாக ப்ரேக் ஆவது உங்களுக்கு எல்லாம் ஜாலியாக இருக்கிறதா என்று ரவீனாவிடம் ஆக்ரோஷமாக கத்துகிறார். தொடர்ந்து தான் விளையாட்டாக பேசியதாகவும் அதற்கு தன்னை ஏன் திட்டுகிறீர்கள் என்றும் ரவீனா எப்போதும்போல அப்பாவியாக கேட்கிறார்.

2வது ப்ரமோ: தொடர்ந்த இந்த விவகாரத்தில் விஷ்ணு நுழைந்து, ஏன் இப்படி எல்லா நேரமும் எமோஷனலாக ஆகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து டென்ஷனான அர்ச்சனா, சும்மா லபோ லபோ லபோ என்று கத்துகிறீர்கள் என்று பூர்ணிமாவிடம் மீண்டும் ஆக்ரோஷமாகியதை தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில் பார்க்க முடிந்தது. இதையடுத்து டாஸ்க்கிற்காக விஷ்ணுவுடன் கட்டப்பட்டிருந்த கயிற்றை பிடுங்கி எறிகிறார் அர்ச்சனா.

அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்: தொடர்ந்து இந்த ஆளோட எல்லாம் இருக்கனும்னு எனக்கு அவசியம் இல்லை. வைத்துவிட்டு போகச் சொல்லுங்க என்றும் ஆக்ரோஷப்பட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போகிறார் அர்ச்சனா. இதனிடையே அவரது இந்த செயல்பாட்டை பார்த்து தினேஷ் மற்றும் மாயா இருவரும் கைக்கொட்டி சிரிப்பதாகவும் ப்ரமோவில் காணப்படுகிறது. அர்ச்சனா இவ்வாறு ஆத்திரமடைந்ததை பார்த்து ஜோவிகா மற்றும் விசித்ரா இருவரும் அதிர்ச்சி அடைவதாகவும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X