Kiran: வேற பொழப்பே இல்லையா? கிரணின் அத்துமீறும் கவர்ச்சி போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட கிரண் ரத்தோட் இன்ஸ்டாகிராமில் மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.
நடிகை கிரண் ரத்தோட்: அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டோலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டினார்.
கவர்ச்சி ரூட்: நடிகை கிரணுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. படவாய்ப்பு இல்லை என்றால் என்ன இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பணத்தை அள்ளினார். இதுல வர பணமும் மேடமுக்கு பத்தாததால், தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை தொடங்கி அதிலும் கவர்ச்சி காட்டி சம்பாதித்தார்.

தெலுங்கு பிக் பாஸ்: வருமானமே இல்லாமல் இன்ஸ்டாவை நம்பி பொழப்பு நடத்தி வந்த கிரண் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் குஷியானாலும் தமிழ் ரசிகர்கள் அப்செட் ஆகி விட்டார்கள். நம்ம தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரண் கலந்து கொண்டிருந்தால் ஆர்மி எல்லாம் ஸ்டார்ட் பண்ணி வேறலெவல் பண்ணிருக்கலாம் என புலம்பினார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் எவிக்ட்டாகி வெளியேறினார்.
பொழப்பு: பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரிதும் நம்பி இருந்த கிரணுக்கு அதுவும் கை மீறி போனதால், என்ன செய்வது என்று தெரியாமல், பொழப்புக்காக மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து அதகளப்படுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோவிற்கு லைக்குகள் குவிந்தாலும் சிலர் இவர் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











