பிக் பாஸ் வீட்டில் சண்டை போட சரியான போட்டியாளர்.. பரிதாபங்கள் ஆனந்தி என்ன பண்ண காத்திருக்காரோ?

சென்னை: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கோலாகலமாகத் தொடங்கியது. நிறைய கேள்வியோடு இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறேன், இதில் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்றாலும், சில கேள்விகள் என்னிடம் இருக்கும் என்று விஜே ஆனந்தி கூறியுள்ளார்.

அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில்,தீப்பொறி பறக்க வெள்ளை கோட் சூட்டில் விஜய்சேதுபதி, அந்த எந்திரன் சிரிப்போடு என்ட்ரி கொடுத்தார். இதில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப்போகிறார் என்று யோசித்து இருப்பீர்கள். இதற்காக ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் யதார்த்தமானவை. சில விஷயங்கள் பண்ணும் போது இந்த உலகத்தில் எது நம்ம கண்ட்ரோலில் இல்லையோ அத நம்ம கண்ட்ரோல்ல எடுக்க டிரை பண்ண கூடாது என்பதை பல முறை நான் கத்துக்கிட்டே இருக்கேன் என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

விஜய் சேதுபதி: தீர்ப்பு கொடுக்கும் போது எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும். தீர்ப்பு கொடுக்கும் போது நான் இப்படிப்பட்ட ஒருவனாக இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எதாவது தப்பாயிருச்சுன்னா பாத்து பேசுப்போம். என்னை கேட்டா உங்க மேல பழி போடுகிறேன். ஓட்டு போட்டது அவங்கதான், உங்கள கேட்டால், தீர்ப்பு கொடுத்தவர கேளுங்கன்னு சொல்லிவிடுகிறேன் என்று வழக்கமான விஜய்சேதுபதி தனது பாணியில் பேசினார்.

பிக் பாஸ் சீசன் 8: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் ஆறாவது போட்டியாளராக வந்த ஆர்ஜே ஆனந்தி, வாழ்க்கையில் அடுத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பெரியவங்க சொன்னா கேட்டுக்கனுமா என்கிற கேள்வி மனதில் இருக்கிறது. இப்படி, என் வாழ்க்கையில் நிறைய கேள்வி இருக்கிறது. சின்ன வயசில் இருந்து பேசுவது எனக்கு பிடிக்கும். இதனால் தான் ஆர்ஜேவாக ஆனேன், இதுநாள் வரைக்கும் பேசித்தான் பொழப்பு நடத்தி இருக்கேன். இந்த வீட்டிலும் நிறைய பேசுவேன்.

கஷ்டமாத்தான் இருக்கும்: வாழ்க்கையில் எதை நோக்கி ஓடுகிறோம், பணம் எதற்கு, இந்த கட்டமைப்பு ஏன், இந்த கட்டமைப்பை உடைத்தால் என்னவாகும் என பல கேள்விகளுக்கான விடையைத் தேடி பல புத்தகத்தை படித்தேன், என் பல கேள்விக்கான பதில் அந்த புத்தகத்தில் இருந்தது. இப்படி நிறைய கேள்விகளோடு இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறேன், இதில் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்றாலும், சில கேள்விகள் என்னிடம் இருக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பல நாட்கள் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது எனக்கு கஷ்டமாத்தான் இருக்கும் இருந்தாலும், இதற்கும் என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன் என்று ஆர்ஜே ஆனந்தி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X