பிக்பாஸ் 8.. சச்சனா என்ட்ரி..அப்பா இருக்கும்போதே மகளை கூப்டுவியா?..மகாராஜாவாக மிரட்டிய விஜய்சேதுபதி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அட்டகாசமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார். முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது விஜய் சேதுபதியின் கைகளுக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து நிகழ்ச்சி புதிய பரிமாணத்தை அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். முக்கியமாக விஜய் சேதுபதி தனது மனதில் பட்டதை சட்டென்று பேசக்கூடியவர். மேலும் எதார்த்தமாகவும்; பாசாங்கு இல்லாத பேச்சுக்களைத்தான் அவர் விரும்புபவர். அதனால் இவரிடம் போட்டியாளர்கள் என்னமாதிரியான உரையாடலை நிகழ்த்தப்போகிறார்கள் என்ற ஆவலும் பிறந்திருக்கிறது.

போட்டியாளர்கள் லிஸ்ட்: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில், "தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், கானா பாடகர் பால் டப்பா, கோகுல்நாத், நடிகர் விஜே விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஐஸ்வர்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீடு: வீட்டின் நுழைவிலேயே நடுவில் ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. அதேபோல் போட்டியாளர்கள் மூன்று பேராக படுக்கும்படி மெத்தை போட்டு ஒரு படுக்கையறையும், தனித்தனியாக படுக்கும்படி மெத்தைகள் போட்டு ஒரு படுக்கையறை என மொத்தம் இரண்டு பெட்ரூம்கள் இருக்கின்றன. மேலும் கிச்சன், கன்ஃபெஷன் ரூம் என பல விஷயங்கள் டிசைன் மாறியிருக்கின்றன. அதுமட்டுமின்றி புதிதாக கோடு ஒன்று வந்திருப்பதால் ரூல்ஸில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.
சாச்சனா என்ட்ரி: மொத்த போட்டியாளர்களில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாளராக சாச்சனா என்ட்ரி ஆனார். இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். அவர் மேடைக்கு வந்ததும் ஆடியன்ஸில் ஒருவர் சாச்சனா என்று சவுண்ட் விட்டார். உடனே அதை கவனித்த விஜய் சேதுபதி, 'டேய் அப்பா இருக்கும்போதே மகளை கூப்டுவியா.. மைக்கை உடவா' என்று சிரித்துக்கொண்டே பேசினார். மேலும் சாச்சனா பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
சாச்சனா ஸ்பீச்: அதனையடுத்து பேசிய சாச்சனா, "எனது அம்மா மீடியாவுக்குள் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. அதனை நான் நிறைவேற்றிவருகிறேன். அம்மாவையும், அவரது சாப்பாடையும் ரொம்ப மிஸ் செய்வேன். முக்கியமாக எனது சகோதரியை ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஏனென்றால் எங்கு சென்றாலும் தினமும் அவரிடமும் தொலைபேசியில் பேசிவிடுவேன். இப்போதுஅ அதெல்லாம் முடியாது' என்று எமோஷனலாக பேசினார். உடனே விஜய் சேதுபதி அதை இடைமறித்து, 'நீ ரொம்ப தைரியமான ஆள். நன்றாக விளையாடு. என்னை அப்பா என்றும் கூப்பிடலாம் சார் என்றும் கூப்பிடலாம். நான் கொஞ்சம் கோபமானால் வருத்தப்படாதே. நன்றாக விளையாடாமல் வார இறுதியில் வந்து அப்பா என சொல்லாதே' என்றார்.


Click it and Unblock the Notifications











