பிக் பாஸ் சீசன் 8: அவமானத்துடன் வெளியேறிய அர்னவ்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் மெதுமெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்த அர்னவிற்கு ஏற்கனவே வெளியில் நெகடிவ் இமேஜ் இருந்ததால், அவரால் நல்ல கண்டென்ட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அர்னவ் இரண்டாவது வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என்ற வசனத்தோடு பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கியது. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக என்ட்ரி கொடுத்த ரவீந்தர், முதல் வாரத்திலேயே எவிக்ட் ஆனார். இதையடுத்து, இரண்டாவது வார நாமினேஷனில், வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி, அர்னவ் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இவர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேறி உள்ளார்.

bigg boss tamil arnav salary 8

தொடர் சர்ச்சை: நடிகர் அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியாகும் போது, சாதாரணமாகத்தான் என் வாழ்க்கை ஆரம்பித்து நன்றாக சென்று கொண்டிருந்த போது, என் வாழ்க்கை, திடீரென பாதாளத்திற்கு சென்று விட்டது. அதில் இருந்து மீண்டு நான் யார் என்று காட்டுவேன் என, பேசி இருந்தார். அவர் சொன்னதற்கு போலவே, அர்னவ் வீட்டில் ஆண்களிடம் அதிகமாக பேசாமல் இருந்தாலும், அவருக்கு என்று கொடுத்த டாஸ்கை சிறப்பாக செய்தார். ஆனால், அர்னவ், திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டு அன்ஷிதாவுடன் பழகியதால், இருவருக்குள்ளும் பெரும் பிரச்சனை ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது.

இதுதான் காரணம்: சர்ச்சையில் சிக்கிய அர்னவ், நடிகை அன்ஷிதாவுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தது மேலும் பேசு பொருளானது. அர்னவ் அன்ஷிதா இருவரும் தங்கள் தனிப்பட்ட விஷயம் குறித்து பேசவில்லை என்றாலும், வெளியில் இணையத்தில் அர்னவ் அவரது மனைவி திவ்யா அன்ஷிதா மூன்று பேரும் கான்பெரன்ஸ் காலில் சண்டை போட்ட பழைய ஆடியோ மீண்டும் வைரலானது. அரனவ் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறியதற்கு முக்கிய காரணமே இதுதான்.

கண்டித்த விஜய் சேதுபதி: பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறி அர்னவ், பெண்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள், ஆனால், ஆண்கள் க்ரூப்பாக சேர்ந்து கொண்டு ஜால்ரா அடிக்கிறார்கள். டேய் நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு எதுக்குடா வந்தீங்க, என்று போட்டியாளர்களை பேச, கடுப்பான விஜய்சேதுபதி, இதுவன்மத்தை கக்கும் இடம் இல்லை, இத்தனை நாள் அவங்களுடன் இருந்துவிட்டு இப்போ அவர்களை தரக்குறைவாக பேசுவது சரியில்லை என்று அட்வைஸ் கொடுத்து அனுப்பிவைத்தார். கடைசியில் அவமானத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்னவ் வெளியேறி உள்ளார்.

சம்பளம்: இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்த அர்னவ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் அர்னவிற்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி அவர் 14 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருப்பதால், 2.8 -3.5 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X