Bigg Boss 8 Tamil: பொங்கி எழுந்த ஜாக்குலின்.. கண்ணீர் விட்டு சென்ற பவித்ரா.. பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: இந்தியாவில் படு ஃபேமஸான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகிறது. இதுவரை ஏழு சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கியது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது மேலும் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் மவுசு தனித்திருக்கிறது. 100 நாட்கள், 18 பிரபலங்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதும், அப்போது நடக்கும் விஷயங்களும் கேம் பிளான். முக்கியமாக கையில் மொபைல் இல்லை, வீட்டில் டிவி இல்லை, எந்த வேலையாக இருந்தாலும் தாமே செய்ய வேண்டும் போன்ற பல ரூல்ஸுகள் பிரபலங்களின் உண்மை முகத்தை இந்த சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிக்பாஸ் 8: தமிழில் இதுவரை 7 சீசன்கள் நடந்திருக்கின்றன. அவற்றை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். என்னது கமல் ஹாசன் சின்னத்திரை ஷோவை தொகுத்து வழங்குகிறாரா என்ற ஆச்சரியம் முதல் சீசனுக்கு இருந்தது. போகப்போக அது குறைந்தாலும் கமலுக்கென்று ஷோவை பார்ப்பவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கமலின் ஏகப்பட்ட முடிவுகள் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அவர் பிக்பாஸ் சீசன் 8லிருந்து விலகிவிட்டார்.
விஜய் சேதுபதி: கமல் ஹாசன் விலகியதை தொடர்ந்து அந்த இடத்துக்கு விஜய் சேதுபதி வந்திருக்கிறார். அடிப்படையில் நல்ல சிந்தனையுடைய விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்களிடம் ஆவல் இருக்கிறது. முக்கியமாக விஜய் சேதுபதி மனதில் பட்டதை யாருக்கும் யோசிக்காமல் நேரடியாக, தெளிவாக சொல்லக்கூடியவர். அதைத்தான் நிகழ்ச்சியின் தொடக்க விழாவிலும் அவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவிக்ட் ஆன சாச்சனா: மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். அவர்களில் 21 வயதான சாச்சனா முதல் நாளே எவிக்ட் செய்யப்பட்டார். இது போட்டியாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ரூல்ஸ் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் கண்டிப்பாக பிக்பாஸ் 8ல் நிறைய கண்ட்டெண்ட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
முதல் பஞ்சாயத்து: பிக்பாஸின் இரண்டாவது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.முதல் ப்ரோமோவில் பெண்கள் சார்பாக விளையாடுவதற்கு ஆண்கள் வீட்டுக்குள் தன்னை அனுப்புமாறு ஜாக்குலின் கேட்டார். அதற்கு சுனிதாவோ நீங்கள் போனால் வெல்ல முடியாது என்கிற தொனியில் சொல்லியதை அடுத்து பஞ்சாயத்துக்கான முதல் தீப்பொறி அங்கு ஆரம்பித்தது. இப்போது அந்த தீப்பொறி சரசரவென பெண்கள் டீமுக்குள் பரவியிருக்கிறது.
இரண்டாவது ப்ரோமோ: அதன்படி இரண்டாவது ப்ரோமோவில் ஜாக்குலின் கொந்தளித்து பேசுகிறார். அவருக்கு தர்ஷிகாவும், பவித்ராவும் கவுண்ட்டர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பவித்ரா, என்னை பாவம் பார்ப்பாங்க என்றெல்லாம் அங்கு அனுப்ப வேண்டாம் என சொல்லிவிட்டு; அன்ஷிதாவிடம் ஏன் என்னைப் பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்க; அதற்கு ஜாக்குலினோ கத்தாதீங்க பவித்ரா என சொல்ல; மெத்தையிலிருந்து எழுந்த பவித்ரா, நான் விளையாடுவேன் என்று நினைத்தால் மட்டும் அனுப்புங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று சொல்லியவாறு கண்ணீர் விட்டபடி பாத்ரூமுக்குள் செல்கிறார். இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஆஹா இரண்டாவது நாளே செம பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகிடுச்சே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











