பிரியங்கா கொடுத்த அறிவுரை.. பிரேக் அப் செய்ய காரணமே அதுதான்.. பிக்பாஸ் அன்ஷிதா கொடுத்த தரமான விளக்கம்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 முடிந்து ஒருவாரம் ஆகப்போகின்றது. ஆனாலும் பிக் பாஸ் குறித்த தகவல்கள், பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள், போட்டியாளர்களின் பேட்டிகள் என இணையமும் பிக்பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து பரபரப்பில் இருந்து கொண்டுதான் உள்ளார்கள். இப்படியான நிலையில், அன்ஷிதா கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

bigg boss 8 anshidha priyanka deshpande

பிக்பாஸ் தமிழ் சீசன் 8இன், டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா இரண்டாவது இடம் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தினை விஷால் பிடித்தார். போட்டியாளர் விஷாலும் அன்ஷிதாவும் காதலிப்பதாக ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. அப்படி இருக்கும்போது, அன்ஷிதா பிக்பாஸ் ஃபினாலே மேடையில் தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் -அப் செய்ததாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

bigg boss 8 anshidha priyanka deshpande

அன்ஷிதா : அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர், நான், அந்த நபரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் பிக்பாஸ் வீடு எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த நபர் இனிமேல் என் வாழ்க்கையில் தேவையில்லை என்ற மனநிலையைக் கொடுத்தது. எனவே நான் எவிக்ட் ஆனதும் அந்த நபரின் வீட்டிற்கே சென்று, இனிமேல், நீ எனது வாழ்க்கையில் இல்லை, எனக்கு நீ வேண்டாம் என கூறிவிட்டேன் எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

bigg boss 8 anshidha priyanka deshpande

பிரேக் அப்: இப்படியான நிலையில், அன்ஷிதா தற்போது அளித்துள்ள பேட்டியில், தனது பிரேக் அப்பிற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக அவர் பேசும்போது, " நான் பாசத்திற்காக ஏங்குபவள், அதனால் அந்த நபரிடம் நான் முதலில் அன்பிற்காக பலமுறை கொஞ்சியுள்ளேன். ஆனால் காதல் யாரையும் கொஞ்ச வைக்காது. கொஞ்ச வைத்தால் அது காதலாக இருக்காது. நான் அப்போது என்னை நேசிக்காமல் இருந்துவிட்டேன் என புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது நான் என்னை மிகவும் நேசிக்கின்றேன்.

bigg boss 8 anshidha priyanka deshpande

பிரியங்கா: ஒருமுறை பிரியங்கா அக்கா என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். ஆனால் அப்போது அவருக்கு எனது சொந்த வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டு இருந்தது எனத் தெரியாது. அவர் என்னிடம் கூறியது, ' எப்போது உன்னை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதே, சுயமரியாதை யாருக்காவும் விட்டுக் கொடுக்காதே' என்றார். பிரியங்கா அக்கா சொன்ன விஷயம், பிக் பாஸ் வீடு கொடுத்த தைரியம், என்னை இறங்கி ஓடு என்கின்றது. நான் அவரை வேண்டாம் என அவரது முகத்திற்கு நேராக சொன்னேன், சிரித்துக் கொண்டு கூறினேன். பிக் பாஸ் வீடு என்னையே என்னிடம் திருப்பிக் கொடுத்துள்ளது. நான் என்னை பத்திரமாக வைத்துக் கொண்டால் போதும்" எனக் கூறினார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

bigg boss 8 anshidha priyanka deshpande

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X