Bigg Boss 8: அன்ஷிதா விஷால் இடையே காதல்? ரஜினி பட மீம் போட்டு அர்னவை கலாய்க்கும் இணையவாசிகள்..
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் பிக் பாஸில் நடந்தது, பிக்பாஸ் நிகழ்ச்சியால் நடந்தது, பிக் பாஸ் போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். இப்படியான நிலையில் போட்டியாளர்கள் அன்ஷிதா, விஷால் மற்றும் அர்னவ் குறித்து இணையவாசிகள் மீம்கள் எல்லாம் உருவாக்கி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர்கள் விளையாடினார்கள். இதில், சீசன் தொடங்கியதும் பலரது கவனத்தினை ஈர்த்த போட்டியாளர்களில் அன்ஷிதாவும் அர்னவும் மிகவும் முக்கியமானவர்கள்.காரணம் இருவரும் காதலிக்கின்றார்கள் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் லவ் கண்டெண்ட் அதிகம் கொடுப்பார்கள் என்ற பேச்சும் எழுந்தது. ஆனால் போட்டியின் மூன்றாவது வாரத்தில் அர்னவ் வெளியேறினார். கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக அன்ஷிதா போட்டியில் நீடித்தார்.

அப்போது போட்டியாளர் விஷால் உடன், அன்ஷிதாவுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கின்றனர் எனக் கூறினார்கள். போட்டியின் முடிவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் வீட்டிற்குள் சென்ற அர்னவ், விஷாலைப் பார்த்து, என்ன லவ்வா எனக் கேட்க, அதற்கு விஷாலும் அர்னவைப் பார்த்து முறைத்துக் கொண்டே, அப்படி இருந்தால் பத்திரிகை எடுத்துக் கொண்டுவந்து உங்களைப் பார்க்கின்றேன் என பதிலடி கொடுத்தார். அன்ஷிதா வீட்டிற்குள் வந்த பின்னரும் விஷால் உடன் தான், அதிகம் நேரம் செலவிட்டார். அர்னவைக் கண்டுகொள்ளவே இல்லை.

பிரேக் அப்: பிக் பாஸ் ஃபினாலே மேடையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் ஒருவரிடம் அன்பிற்காக கெஞ்சியுள்ளேன். இப்போது அவர் என் வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். அதனை அவரது வீட்டிற்கே போய் சொன்னேன் எனக் கூறினார். மேலும் தற்போது தான் மிகவும் சுதந்திரமாக உணர்வதாகவும், இந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் பிக் பாஸ் வீடு கொடுத்துள்ளது.

மீம்: இதுவும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக மாறியது. இப்படி இருக்கும்போது, இணையவாசிகளும் மீம் கிரியேட்டர்களும் அன்ஷிதா, விஷால் மற்றும் அர்னவை கலாய்த்து மீம் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியான ஜெயிலர் படத்தின் காட்சியை வைத்து, இவர்கள் மூவரையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது, அர்னவ் அன்ஷிதாவை காதலிப்பதாகவும், ஆனால் அன்ஷிதா விஷாலைக் காதலிப்பதாகவும் அதில் கூறுகின்றனர்.

ரியாக்ஷன்: இதனைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், குபீர் சிரிப்பு எமோஜிகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், விஷால், அன்ஷிதா மற்றும் அர்னவை டேக் செய்தும் வருகின்றனர். ஆனால் தான் இன்னாரைத்தான் காதலிக்கின்றேன் என அன்ஷிதாவோ, விஷாலோ மற்றும் அர்னவோ யாரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











