பிக் பாஸ் முடிந்து ஒரு மாதம் ஆச்சு.. இப்பவும் சௌந்தர்யாவுக்கு தகுதி இல்லைனு சொல்லும் முத்துக்குமரன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக ஆகிவிட்டது. ஆனாலும் இந்த சீசன் பிக் பாஸ் பிரபலங்கள் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டே உள்ளது. குறிப்பாக ரசிகர்களை சந்திப்பது, வெளியில் இணைந்து டூர் செல்வது என அனைத்துமே இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படியான நிலையில், இரண்டாவது இடம் பெற்ற சௌந்தர்யா குறித்து முத்துக்குமரன் அண்மையில் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சீசனின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாவது இடத்தை சௌந்தர்யா நஞ்சுண்டன் பிடித்தார். இந்த சீசனில் பல வெற்றியாளர்கள் இருந்தார்கள் எனக் கூறலாம். உதாரணத்திற்கு, ஜாக்குலின், தீபக், வி.ஜே. விஷால், மஞ்சரி மற்றும் பவித்ரா என அவர்களையும் அந்த வரிசையில் நிறுத்தலாம். மேலும் இவர்களும் கோப்பைக்குரியவர்கள்தான். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் முத்துக்குமரன், ஒரு குறிப்பிட்ட வாரத்தில் இருந்து, முத்துக்குமரன் அனைத்து வாரங்களிலும் சௌந்தர்யா நஞ்சுண்டனை நாமினேட் செய்து கொண்டு வந்தார். அது மறைமுக ஓட்டிங்காக இருந்தாலும் சரி நேரடி ஓட்டிங்காக இருந்தாலும் சரி, சௌந்தர்யாவை, முத்துக்குமரன் நாமினேட் செய்து கொண்டே இருந்தார். பல இடங்களில் சௌந்தர்யா குறித்து மற்ற போட்டியாளர்களிடமும் பேசியுள்ளார்.

முத்துக்குமரன்: இந்நிலையில், இசையமைப்பாளரும் பிக் பாஸ் விமர்சகருமான, ஜேம்ஸ் வசந்தன் முத்துக்குமரனை பேட்டி எடுத்தார். அதில் அவர் ரசிகர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கேள்வியை முத்துக்குமரனிடம் கேட்டபோது, முத்துக்குமரன் அளித்த பதில் சௌந்தர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, " பிக் பாஸ் விளையாட்டில் தொடருவதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாத நபர் சௌந்தர்யா. இது என்னுடைய கருத்து, என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சௌந்தர்யா: சௌந்தர்யா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார் என்றால், அவர் செய்தது மக்களுக்கு பிடித்துள்ளதால் தான், அவருக்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அவர்களுக்கு சௌந்தர்யாவை பிடித்துள்ளது. எனக்கும் கூட சௌந்தர்யாவை பிடித்திருக்கலாம். ஆனால் பிக் பாஸ் போட்டியில் நீடிப்பதற்கான உழைப்பை சௌந்தர்யா செலுத்தினாரா என்றால், இல்லை என்கிற பார்வையில் இருந்து கூறுவது முத்துக்குமரன் தான். சௌந்தர்யா இந்த விளையாட்டில் முன்னேறுவதற்குத்தான் தகுதியில்லாத நபர். அதனால்தான் பிக்பாஸ் கேட்கும்போது எல்லாம் சொன்னேன். நான் என் கருத்தில் இருக்கும்போது, எதிர் கருத்தை நான் தவறு எனக் கூற முடியாது அல்லவா" என பதில் அளித்துள்ளார்.
ரசிகர் கமெண்ட்: இவர் இவ்வாறு பதில் அளித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சௌந்தர்யாவின் ரசிகர் ஒருவர், " பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதம் ஆச்சு. ஆனால் முத்துக்குமரன் இன்னும் சௌந்தர்யாவுக்கு தகுதி இல்லைனு புலம்பிட்டு இருக்காரு. ஆனால் சௌந்தர்யா ரசிகர்களைச் சந்தித்துக் கொண்டு ஊர் ஊராக ஜாலியாக சுற்றிக் கொண்டு உள்ளார். பீப்புல் வின்னர் சௌந்தர்யா " எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவை சௌந்தர்யாவின் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











