விஜே பார்வதியையும், கம்ருதீனையும் சேர்த்து வைப்பாரா பாருவின் தாய்?.. அடுத்தக்கட்டத்துக்கு போறாங்களே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக மாறிவிட்டார். ஆனாலும் அந்த சீசனில் ஹைலைட்டாகவும், சென்சேஷனாகவும் இருந்தது என்றால் விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். இரண்டு பேரில் ஒருவர் டைட்டிலை அடிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் இரண்டு பேருமே ரெட் கார்டு பெற்று விலகிவிட்டார்கள். இதற்கிடையே இரண்டு பேருக்கும் நெருக்கமும் அதிகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் அதிக கவனம் ஈர்த்தவர்கள் என்றால் விஜே பார்வதியும், கம்ருதீனும்தான். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சில வாரங்களில் அவர்கள் இரண்டு பேருக்குமிடையே பெரிதாக ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் இடையே வார்த்தை போரும் நடந்தது. ஆனால் நாளாக நாளாக காட்சிகள் மாறி; இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள். நட்புக்கும் மேலே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அவர்களும் கூறினார்கள்.
டபுள் மீனிங் பேச்சு: இரண்டு பேருக்குமிடையேயான நெருக்கம் ஒருகட்டத்தில் அதிகமாகி இரட்டை அர்த்தத்தில் எல்லாம் பேசினார்கள். அதுமட்டுமின்றி தனியறைக்கு செல்வது போன்ற விஷயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தார்கள். இது ஒருகட்டத்தில் ஓவர் டோஸாகி ரசிகர்களிடையே முக சுளிப்பைத்தான் உண்டு செய்தது. இரண்டு பேரும் நெருக்கமானதால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் நின்றது குறிப்பிடத்தக்கது.

ரெட் கார்டு பெற்ற பாரு, கம்ருதீன்: சூழல் இப்படி இருக்க டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின்போது சக போட்டியாளர் சான்ட்ராவை விஜே பார்வதி காரிலிருந்து எட்டி உதைத்தார். அதற்கு கம்ருதீனும் உதவி செய்தார். அந்த சம்பவம் பெரிய பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து; உடனடியாக அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள். இந்த சீசனின் ஹைலைட்டாக இந்த சம்பவம் இருந்தது. அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த எபிசோடு டிஆர்பியிலும் சக்கைப்போடு போட்டது.
வெளியே வந்தும் ஒற்றுமை: கம்ருதீன் வீட்டில் இருந்தபோதும் சரி; வெளியேறியபோதும் சரி அவரிடம் பார்வதியுடனான பழக்கத்தை நிறுத்திவிடு; நிறைய அனுபவிப்பாய் என்று கானா வினோத், டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் எல்லாம் அட்வைஸ் செய்ததும் நினைவுகூரத்தக்கது. ஆனாலும் பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு விஜே பாருவும், கம்ருதீனும் இன்னும் டச்சில் இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில்கூட ஒரு நிகழ்ச்சியில் இரண்டு பேரும் ஒன்றாக கலந்துகொண்டார்கள்.
தாயிடம் சென்ற கோரிக்கை: இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து விஜே பார்வதி தனது தாயுடன் வீட்டுக்கு கிளம்பினார். அப்போது அவரது தாயிடம் ரசிகர் ஒருவர், 'அம்மா பார்வதியை கம்ருதீனுடன் சேர்த்து வைத்துவிடுங்கள்' என கோரிக்கை வைத்தார். அதை கேட்டு பாருவும் வெட்கத்தில் சிரிக்க; தாயோ லாவகமாக அந்த கேள்வியை சமாளித்துவிட்டார். தற்போது இந்த வீடியோ சோஷியல் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











