தெறிக்கவிடும் அஜித்தின் வாட்ஸ் அப் டிபி… இன்னும் ரேஸ் மோகம் குறையல போல... தல எப்பவுமே மாஸ் தான்!

தாய்லாந்து: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

துணிவு படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக பாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் ஜோடியான அமீரும் பாவ்னியும் அஜித்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது.

விரைவில் ஏகே 62

விரைவில் ஏகே 62

ஹெச் வினோத் இயக்கும் துணிவு படத்தில் நடித்து வரும் அஜித், அதன் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் உள்ளார். மிக வேகமாக நடைபெற்று வரும் துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், பிக்பாஸ் அமீர், பவானி ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருமே துணிவு படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து அஜித்துடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பிக்பாஸ் அமீர் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் அஜித் ரசிகர்களிடம் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.

அஜித்தின் வாட்ஸ் அப் டிபி

அஜித்தின் வாட்ஸ் அப் டிபி

பிக்பாஸ் ஜோடியான அமீரும் பாவானியும் அஜித் பக்கத்தில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மேலும், அஜித்துடனான வாட்ஸ் அப் சாட்டிங்கையும் அமீர் ஷேர் செய்துள்ளார். இதுதான் இப்போது தீயாக பரவி வருகிறது. அதில் Ak sir என அஜித்குமாரின் பெயரை அமீர் சேமித்து வைத்துள்ளார். அமீர் ஷேர் செய்த புகைப்படத்தில் இருந்து அஜித்தின் வாட்ஸ் அப் டிபி ரசிகர்களை இன்னும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரேஸர் அஜித்

ரேஸர் அஜித்

அந்த வாட்ஸ அப் டிபியில் கார் ரேஸில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துள்ளார் அஜித். அதனை ஷேர் செய்துவரும் அவரது ரசிகர்கள் அஜித்துக்கு ரேஸ் மீதான மோகம் இன்னும் குறையவில்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், விதவிதமான கேப்ஷன்களுடன் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகராக இருந்தாலும், கார், பைக் ரேஸ்களில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பிரபலமானவர் அஜித்.

துணிவு ரிலீஸ் எப்போது?

துணிவு ரிலீஸ் எப்போது?

துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் ஜான் கோக்கன், ஆரி, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்போது தாய்லாந்தில் நடைபெறுவது தான் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து படத்தை டிசம்பருக்குள் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. துணிவு ஆக்சன் ஜானரில் வங்கிக் கொள்ளையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X