அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிப்பாக்காதீங்க.. ஆணின் வீரம் பெண்ணின் ஆடையிலா?.. ஆரி பேட்டி!

சென்னை: பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜூன் நடிப்பில் சுந்தர பாண்டி இயக்கத்தில் 27ந் தேதி வெளியானத் திரைப்படம் 'Fourth Floor' (போர்த் ஃப்ளோர்). க்ரைம் தில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நாயகியாக தீப்ஷிகா, படத்தில் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆரி, விஜய், சங்கீதா விவாகரத்து பற்றி பேச யாருக்குமே உரிமை இல்லை என்றார்.

செய்தியாளர் ஒருவர் விஜய், சங்கீதா விவாகரத்து பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஆரி, நடிகரின் வாழ்க்கையை மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. பொது வாழ்க்கைக்கு வரும்போது இது போன்ற விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு விவாதப் பொருளாக்கப்படுகிறது. முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள், மீடியாக்கள் மட்டும் இருந்தன, அவர்கள் ஒரு செய்தி சரியா.. தவறா.. என ஆராய்ச்சி செய்த பின்னே வெளியிடுவார்கள். ஆனால், இப்போ பொய் செய்தியாகி விடுகிறது. உண்மையை சொல்வதற்கு ஒரு மீட்டிங் போட வேண்டி இருக்கிறது. இது மிகவும் அபாயகரமான சூழல்.

Aari Arjunan Bigg boss
Photo Credit:

நடிகர் ஆரி அர்ஜூன்: விஜய், சங்கீதா விஷயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. திருமணம், விவாகரத்து அவருக்கு மட்டும் நடக்கவில்லை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது இரண்டு பேரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதில் தனிமனிதராக இருந்து கொண்டு கருத்து சொல்ல முடியாது. அடுத்தவர்களின் பாத்ரூமை எட்டிப் பார்ப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. பாத்ரூமையோ, படுக்கை அறையையோ எட்டி பார்க்கும் கலாச்சாரம் மிகவும் அசிங்கமாக உள்ளது.

ஆணின் வீரம் பெண்ணின் ஆடையிலா: அவரின் அரசியலை பற்றி விவாதிக்கலாம், ஆனால், தனி மனித தாக்குதல் என்பது மிகவும் தவறானது. பல மீடியாக்களில் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய விவாதமே நடத்துகிறார்கள். ஒரு பெண்ணுடன் ஆண் தானே இருக்கிறான். அந்த ஆணை பற்றி யாருமே விமர்சனம் செய்வதில்லை, ஆனால், அந்த பெண்ணை பற்றி தான் எப்போதுமே நாம் விமர்சனம் செய்கிறோம். ஒரு ஆணின் வீரத்தை ஒரு பெண்ணின் ஆடையில் கொண்டு வந்து வைத்திருக்கிறோம். ஆண் ஆடை இல்லாமல் செல்லும்போது யாரும் நம்மை எதுவும் சொல்வதில்லை. ஆனால், ஒரு பெண்ணின் உடலை பற்றி அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுகிறார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஆரி மிகவும் கடுமையாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X