பாவம் பச்சப்புள்ள ருத்ரா.. கடைசி ஆசை கூட நிறைவேறாம செத்துப் போச்சு.. கண்ணீர் கடலில் பிக் பாஸ் ஆரி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் தீவிர ரசிகையான குழந்தை ருத்ரா பரிதாபமாக உயிரிழந்தது நடிகர் ஆரியை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆரி.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

குழந்தை ருத்ரா

குழந்தை ருத்ரா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரிக்கு வாரம் ஆனால் 50 ஓட்டுக்களையும் போட்டு வந்த குழந்தை ருத்ரா உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மரணம் ரசிகர்களை மட்டுமின்றி நடிகர் ஆரியையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

தண்டு வட பிரச்சனை

தண்டு வட பிரச்சனை

குழந்தை ருத்ராவுக்கு முதுகு தண்டுவடத்தில் அரிய வகை பாதிப்பு தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மொபைல் போனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மட்டுமின்றி நடிகர் ஆரிக்கு ஓட்டுக்களையும் அவர் செலுத்தி உள்ளார்.

அந்த வீடியோ

அந்த வீடியோ

பரிதாபமாக உயிரிழந்த குழந்தை ருத்ரா பிக் பாஸ் சமயத்தில் நடிகர் ஆரிக்கு ஓட்டுப் போடும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி குழந்தை ருத்ராவின் மறைவால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

என் சுவாசம் உள்ளவரை

என் சுவாசம் உள்ளவரை

"குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன்" என நடிகர் ஆரி உருக்கமாக பதிவிட்டு இருப்பது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடைசி ஆசை

கடைசி ஆசை

ஆரியின் அந்த ட்வீட்டுக்கு கீழே ருத்ராவின் அம்மா சந்தியா போட்டுள்ள ட்வீட் மேலும் ரசிகர்களை உருக்கி வருகிறது. அவ உங்களோட தீவிர ரசிகை. உங்களை நேரா பார்த்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பா.. இப்ப சொர்க்கத்துல ஹேப்பியா இருப்பா என ருத்ராவின் அம்மா போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X