மேடையில் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி....காரணம் இது தானா?
சென்னை : கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாகவும், நேரடியாக பெயரை சொல்லியும் திட்டி தீர்த்தார். அதோடு அவரை எச்சரிப்பதாகவும் சொன்னார்.
புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர். ஸ்ரீ மாசாணியம்மன் பிக்சர்ஸ் பேனரில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தில் கரு.பழனியப்பன், நித்தியா, மாயா, செளந்தர் ராஜன், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

ஆரி தவற விட்ட மாறி
இந்த படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேடையில் பேசிய பிக்பாஸ் ஆரி, தனுஷின் மாரி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது. ஏதோ ஒரு புரிதல் இல்லாமல் இது போல் சில படங்களை தவிர்த்து உள்ளேன். இப்போது மாற்றி வருகிறேன். அதே போல் தென் மேற்கு பருவக்காற்று படமும் நான் நடிக்க வேண்டியது.

ஓப்பனாக பேசிய ஆரி
சீனு ராமசாமி இதே சாலிகிராமத்தில் என்னை அழைத்து பேசி, நாளை காலை வந்துவிடு என்று சொன்னார். என்னுடைய அலட்சியம் அல்லது சூழல்...ஸ்டன்ட் பிராக்டிஸ் முடித்து விட்டு தாமதமாக போன் செய்தேன். கோபப்பட்ட அவர், நான் சொல்லும் போது வா. நான் ஊருக்கு கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டார் என்றார் ஆரி.

ப்ளூ சட்டை மாறன் எங்கிருந்து வந்தார்
பிறகு ப்ளூ சட்டை மாறனை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு திட்டி தீர்த்தார் ஆரி. பிறகு ஒரு கட்டத்தில் ப்ளூ சட்டை மாறனின் பெயரை சொல்லி விட்டார். சூசகமாக சொல்லவில்லை. அவரை தான் சொல்கிறேன். எச்சரிக்கிறேன். ப்ளூ சட்டை மாறன் எங்கு இருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம். பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என்றார் ஆரி.

ஆரி கோபத்திற்கு இதுதான் காரணமா
அஜித் நடித்த வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். படத்தை தாண்டி அஜித்தை உருவ கேலி செய்தும் விமர்சித்திருந்தார். இதனை பிரபலங்கள் பலரும் கண்டித்திருந்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இருந்தும் அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை விமர்சித்து ட்வீட் போட்டு வந்தார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











