பிக் பாஸ் அபிநய் மனைவியை பிரிந்து விட்டாரா? ... அவரே சொன்ன தகவல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிநய் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக பரவி வரும் தகவலுக்கு அவரே பதிலளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் அபிநய் வட்டி.
இவர்கள் ராமானுஜம், சென்னை 6000028 பார்ட் 2 போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்ததும் மந்தமாக விளையாடிய அபிநய் நாட்கள் செல்ல செல்ல விளையாட்டில் தீவிரம்காட்டினார். ட்ரூத் ஆர் டேர் கேமில் ராஜூ, பாவனியை லவ் பண்றியா என ஒரு கேள்வியை கேட்டு பிரச்சினையை தொடங்கினார். இதனால், அபிநய்-பாவனி விவகாரம் வீட்டில் பூதாகரமாக வெடித்தது. இறுதியில், கமல் குறும்படம் போட்டு பிரச்சினை தீர்த்துவைத்தார்.

சோசியல் மீடியாவில் சர்ச்சை
அபிநய், பாவனி விவகாரம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த அபிநய் பின்னர் வெளியேறினார். அபிநய் வெளியேறியதும், அவரின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மாற்றினார். அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்திருந்த பெயரில் அபிநய் நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றியதால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

வெளியேறினார்
ஆனால், அபிநய் நாங்கள் பிரியவில்லை ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், இவர்கள்வி பிரிந்து விட்டதாகன இணையத்தில் அவ்வப்போது வதந்தி பரவிவந்தன. இதையடுத்து மீண்டும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்த அபிநய் கடந்த வாரம் திடீரென வெளியேறினார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில், ஒரு ரசிகர், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இது தவறான நபர்களால் பரப்பப்படும் வதந்தி, இது உண்மை இல்லை, நானும் எனது மனைவி அபர்ணாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவர்கள் குறித்து தொடர்ந்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











