விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. புது காதலியை அறிமுகப்படுத்திய அபிஷேக் ராஜா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அபிஷேக் ராஜா. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல விமர்சனங்களில் அபிஷேக் ராஜா சிக்கியதால், 21 நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த அவர், 63வது நாளில் மீண்டும் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமான அபிஷேக் ராஜா காதலர் தினமான இன்று தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சினிமா விமர்சகரான அபிஷேக் ராஜா Fully Filmy எனும் யூடியூப் சேனலில் விமர்சகராக இருந்து பிரபலமானார். அதன் பிறகு ஓப்பன் பண்ணா எனும் யூடியூப் சேனலை தொடங்கி தமிழ் சினிமா விமர்சனங்களை கூறி வந்தார். இவர், கமல், விஜய்சேதுபதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டிகளை தொகுத்து வழங்கினார் அபிஷேக் ராஜா.

Bigg Boss Abhishek Raja introduces his new girlfriend on valentines day

இவர் சினிமா விமர்சகராக மட்டுமில்லாமல், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, ராஷி கன்னா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் ராஷி கன்னாவின் நண்பராக நடித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 5: இதையடுத்து, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த நிரூப், பிரியாங்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பக்காவாக காய்களை நகர்த்தி விளையாடினார். பிக்பாஸ் வீட்டில் இவர் மற்றவர்களிடம் பேசிய விதம் ரசிகர்களுக்கு பிடிக்காததால், இணையத்தில் அபிஷேக் ராஜாவை வச்சு செய்தார்கள். அந்த சீசனில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவராக அபிஷேக் ராஜா இருந்தார்.

Bigg Boss Abhishek Raja introduces his new girlfriend on valentines day

முதல் மனைவியை பிரிந்தார்: அபிஷேக்கிற்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன விஷயமே அவர் பிக் பாஸுக்கு சென்ற பின்னர் தான் பலருக்கும் தெரியவந்தது. அபிஷேக்கின் மனைவி பெயர் தீபா என்றும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும். ஆனால், திருமணம் ஆன சில வருடங்களில் விவாகரத்து செய்துவிட்டதாக செய்தி வெளியானது. மேலும் அபிஷேக்கின் மனைவி தீபா, அபிஷேக் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Bigg Boss Abhishek Raja introduces his new girlfriend on valentines day

புது காதலி: அபிஷேக் ராஜா முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், காதலர் தினமான இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் குறைகள் உள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கும் என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சுவாதி. நான் ஏன், பார்ட்டிக்கு பின்னர் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டார் டா திரைப்படம்: யூடியூப் விமர்சகராக இருந்த அபிஷேக் ராஜா இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ஸ்டார் டா என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X