ச்சீ என்ன கேவலமான புத்தி.. டீப் ஃபேக் சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம்.. விளாசிய நடிகை!
சென்னை: அண்மைக்காலமாக டீப் ஃபேக் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. பிரபலங்கள் மற்றும் பொதுமககள் என அனைவருமே போலியான கிளிப்களை பரப்புவதால் அவர்கள் எளிதில் குறிவைக்கப்படுகிறார்கள். ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இந்த டீப் பேக் வீடியோ சர்ச்சையில் பிக் பாஸ் நடிகை அபிராமி சிக்கி உள்ளார்.
நவம்பர் மாதத்தில் கறுப்பு நிற வொர்க் அவுட் உடை அணிந்து, லிஃப்ட் ஒன்றின் உள்ளே நடிகை ராஷ்மிகா மந்தனா நுழையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அரைகுறை ஆடையுடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வெளியானது.இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வீடியோவில் இருந்தவர் பிரிட்டிஷ்-இந்திய சமூக ஊடக ஆளுமை ஜாரா படேல் என்பது தெரிய வந்தது.

இந்த டீப் பேக் வீடியோ தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 465, 469 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66C, 66E ஆகியவற்றின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் பேக் வீடியோவை உருவாக்கிய ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 23 வயதான ஈமணி நவீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ச்சீ என்ன கேவலமான புத்தி: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்திய அபிராமி, என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அண்மைக்காலமாக இந்த டீப் ஃபேக் மிகவும் பிரபலமாகி வருகிறது. உண்மையில் இது கவலைப்பட வேண்டிய விஷயம். இதை உருவாக்கியவன் குற்றவாளி என்றால், அதை பகிர்ந்து மகிழ்ச்சி காண்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை உண்டு. நான் தைரியமான பெண்.
சும்மாவிட மாட்டேன்: தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை தவிர மற்ற அனைத்துவிதமான கீழ்தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது. பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற விஷயம் இனி எந்தப் பெண்களுக்கும் நடக்கக் கூடாது. இந்த விவகாரம் நான் சும்மா விடமாட்டேன். இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப் போகிறேன் என ஆவேசமாகக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











