For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன கொடுமை இது...நயன்தாராவாக மாறிய பிக் பாஸ் பிரபலம்...பாராட்டிய விக்னேஷ் சிவன்

  |

  சென்னை : தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு அதிக எதிர்பார்ப்புகளுடன் நடந்தது நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம். ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

  இவர்களின் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர்கள் மணிரத்னம், அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு, வாழ்த்தினர். இந்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியிட்டார்.

  நயன் - விக்கியின் திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு Netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.அதனால் புகைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வெளியிட வேண்டும் என கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.அதன்படி வெகு சில போட்டோக்களை மட்டுமே இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

  கார் விபத்தால் கோமாவில் இருந்த பிரபல பாலிவுட் நடிகையின் உயிர்பிரிந்தது: அம்மாவை நினைத்து உருகிய மகன்கார் விபத்தால் கோமாவில் இருந்த பிரபல பாலிவுட் நடிகையின் உயிர்பிரிந்தது: அம்மாவை நினைத்து உருகிய மகன்

  காத்திருக்கும் ரசிகர்கள்

  காத்திருக்கும் ரசிகர்கள்

  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு முதல் சீசனாக விரைவில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.அது சம்பந்தமான டீசர் சமீபத்தில் வெளியானது.இதற்கிடையில் விக்னேஷ் சிவனும் தன் பங்கிற்கு அவ்வப்போது தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வைரலாக்கி, செம டிரெண்டாக்கி வருகிறார்.

  டூர் போன நயன் - விக்கி ஜோடி

  டூர் போன நயன் - விக்கி ஜோடி

  திருமணத்திற்கு பிறகு தாய்லாந்தில் ஹனிமூன் முடித்து திரும்பியதில் இருந்து கடந்த 2 மாதங்களாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வேலைகள் பயங்கர பிஸியாக இருந்தனர். இதனால் ரிலாக்ஸ் செய்வதற்காக நேற்று ஐரோப்பா டூர் கிளம்பி சென்றுள்ளனர். புறப்படும் போதே ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தி உள்ளார் விக்னேஷ் சிவன். இதனால் இனி தினம் தினம் இது போல் போட்டோக்கள் வந்து டிரெண்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

  நயன்தாராவாக மாறிய பிக்பாஸ் பிரபலம்

  நயன்தாராவாக மாறிய பிக்பாஸ் பிரபலம்

  இந்த சமயத்தில் நயன்தாராவின் வெட்டிங் லுக்கை மறு உருவாக்கம் செய்து பிக்பாஸ் ஆர்த்தி போட்டோ வெளியிட்டுள்ளார். திருமணத்தன்று நயன்தாரா அணிந்திருந்தது போன்ற சிவப்பு நிற புடவையில் போஸ் கொடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதோடு, தனது போட்டோ மற்றும் நயன்தாராவின் போட்டோவை ஒப்பிட்டு "என்ன கொடுமை இது.. Expectation vs reality" எனக் குறிப்பிட்டிருந்தார்.

  விக்னேஷ் சிவனே பாராட்டி இருக்கார்

  விக்னேஷ் சிவனே பாராட்டி இருக்கார்

  இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி ஆர்த்தியை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் 'நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் டியர் ஆர்த்தி' என கமெண்ட் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவனே இவரை பாராட்டி உள்ளாரா என பலரும் ஆச்சரியமும் தெரிவித்து வருகிறார்கள்.

  இவரை யாருன்னு தெரியுதா?

  இவரை யாருன்னு தெரியுதா?

  1990 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஆர்த்தி, பிறகு காமெடி நடிகையாக சினிமா, டிவி சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று வருகிறார். கிரி, படிக்காதவன், குட்டி போன்ற படங்களில் இவரின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

  English summary
  Bigg boss fame Aarthi recreates Nayanthara's wedding look. She shared a photo in her twitter page. Netizens trolled aarthi. But Vignesh Shivan praised Aarthi's look as so beautiful. This photo goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X